ப.சிதம்பரம் மீது நடவடிக்கை: சிவகங்கையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்


ப.சிதம்பரம் மீது நடவடிக்கை: சிவகங்கையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Jun 2018 3:45 AM IST (Updated: 6 Jun 2018 12:35 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுப்பதை கண்டித்து சிவகங்கை மாவட்ட காங்கிரசார் சார்பில் சிவகங்கை அரண்மனை வாசலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட காங்கிரசார் சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுப்பதை கண்டித்து, சிவகங்கை அரண்மனை வாசலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சுந்தரம், அருணகிரி, மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஸ்ரீவித்யா, முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரெத்தினம், மாவட்ட துணைத்தலைவர் சண்முகராஜன், டாக்டர் செல்வராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் நகர தலைவர் பிரபாகரன் நன்றி கூறினார்.


Next Story