மூடப்பட்ட டாஸ்மாக்கடையை மீண்டும் திறக்க எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
திருவாரூரில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் பாதுகாப்புடன் கடை திறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர்,
திருவாரூர் நகரின் முக்கிய சாலையாக பனகல் சாலை உள்ளது. பஸ் நிலையத்தை இணைக்கும் இந்த சாலையில் எந்த நேரமும் போக்குவரத்து அதிகமாக உள்ள பகுதியாக இருந்து வருகிறது. இந்த பனகல் சாலையில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. கடந்த மாதம் கோர்ட்டு உத்தரவின்படி அந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இந்த நிலையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க அதிகாரிகள் நேற்று முன்தினம் வந்தனர். அப்போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.
இதை தொடர்ந்து மூடப்பட்ட டாஸ்மாக் கடையை நேற்று காலை மீண்டும் திறக்க அதிகாரிகள் வந்தனர். இதனை அறிந்த தி.மு.க. நகர செயலாளர் பிரகாஷ் தலைமையில் தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர். பின்னர் அவர்கள் டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் நகரசபை துணைத்தலைவர் செந்தில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரஜினிசின்னா, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் கருணாநிதி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அமுதாசேகர், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ரமேஷ்குமார், வினோத் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம் காரணமாக பாதுகாப்பு பணிக்காக டாஸ்டாக் கடை முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். இதனையடுத்து தி.மு.க.வினர் மற்றும் பெண்கள், மாவட்ட வருவாய் அதிகாரி, டாஸ்மாக் மாவட்ட மேலாளாளர், நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு மூடப்பட்ட டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என வலியுறுத்தி தனித்தனியே மனு அளித்தனர். இந்த நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story