மொடக்குறிச்சியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


மொடக்குறிச்சியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Jun 2018 4:00 AM IST (Updated: 6 Jun 2018 1:13 AM IST)
t-max-icont-min-icon

மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மொடக்குறிச்சி,

அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு அரசு ஊழியர்கள் சங்க மொடக்குறிச்சி வட்ட கிளை தலைவர் கே.முருகன் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் மூர்த்தி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். 56–வது அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க துணை தலைவர் சின்னுசாமி நன்றி கூறினார்.


Next Story