பெருந்துறையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்
பெருந்துறையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பெட்ரோல்– டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெருந்துறை,
பெட்ரோல்– டீசல் விலை உயர்வை கண்டித்து பெருந்துறையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெருந்துறை பஸ்நிலையத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தாலுகா செயலாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும், கச்சநத்தம் கிராமத்தில் ஆதிதிராவிட மக்களின் மீது நடத்தப்பட்ட கொடும் தாக்குதலை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு கோஷம் எழுப்பினார்கள்.
Related Tags :
Next Story