சத்தியில் பெட்டோரல்–டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்


சத்தியில் பெட்டோரல்–டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Jun 2018 3:30 AM IST (Updated: 6 Jun 2018 1:13 AM IST)
t-max-icont-min-icon

ஏ.ஐ.டி.யு.சி. தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சத்தியமங்கலத்தில் பெட்ரோல்–டீசல் உயர்வை கண்டித்தும், மத்திய, மாநில அரசை கண்டித்தும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சத்தியமங்கலம்,

பெட்ரோல்–டீசல் உயர்வை கண்டித்தும், மத்திய, மாநில அரசை கண்டித்தும் சத்தியமங்கலத்தில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க நிர்வாகி ஸ்டாலின் சிவக்குமார் தலைமை தாங்கினார். பொறுப்பாளர் பொங்கியண்ணன், சந்திரன் ஆகியோர் பேசினார்கள். மேலும், கடன் கேட்டு பிரதமர் மோடிக்கு மனு அனுப்பும் போராட்டமும் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சங்க ஊழியர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story