தென்காசி, சங்கரன்கோவில் பகுதியில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் வேலை நிறுத்தம் 4 லட்சம் தபால்கள் தேக்கம்
தென்காசி, சங்கரன்கோவில் பகுதியில் கிராமிய அஞ்சல் ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக 4 லட்சம் தபால்கள் தேக்கம் அடைந்துள்ளன.
தென்காசி,
தென்காசி, சங்கரன்கோவில் பகுதியில் கிராமிய அஞ்சல் ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக 4 லட்சம் தபால்கள் தேக்கம் அடைந்துள்ளன.
வேலைநிறுத்தம்கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சம்பள உயர்வு கேட்டு கடந்த 15 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தினமும் தலைமை தபால் நிலைய அலுவலகங்கள் முன்பு பல்வேறு விதமான போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். கோவில்பட்டி கோட்டமான தென்காசி, சங்கரன்கோவில், கோவில்பட்டி ஆகிய 3 இடங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களின் கட்டுப்பாட்டில் கிராமப்புறங்களில் சுமார் 300 கிளை தபால் நிலையங்கள் உள்ளன. இந்த தபால் நிலையங்களில் சராசரியாக தினமும் 80 முதல் 100 தபால்கள் வரை பட்டுவாடா நடைபெறுகின்றன.
தபால் ஊழியர்களின் போராட்டம் காரணமாக இந்த பட்டுவாடா செய்யப்படாமல் சுமார் 4 லட்சம் தபால்கள் தேக்கம் அடைந்துள்ளன. மேலும் வயதானவர்கள் தங்களது சேமிப்பு கணக்குகளை நகரங்களில் உள்ள வங்கிகளுக்கு செல்லாமல் கிராமப்புற தபால் நிலையங்களில் தொடங்கி பண பரிவர்த்தனை செய்து வருகிறார்கள். மேலும், வைப்புத் தொகை போன்ற பல்வேறு மத்திய அரசின் திட்டங்களுக்கு பண முதலீடு செய்துள்ளனர். இவை அனைத்திலும் எவ்வித பண பரிவர்த்தனையும் நடைபெறாமல் முடங்கி போய் உள்ளது.
பொதுமக்கள் சிரமம்இது ஒருபுறம் இருக்க பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு தபால் மூலமாகவே பாஸ்போர்ட்டுகள் அனுப்பப்படுகின்றன. நகரங்களில் வங்கி கணக்குகள் வைத்திருப்பவர்களுக்கு மற்றும் பிற அரசு அலுவலகங்களில் இருந்து வரவேண்டிய கடிதங்கள் தபால் மூலமாகவே அனுப்பப்படுகிறது. இந்த போராட்டத்தினால் கிராமப்புற மக்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லாத சூழல் உள்ளது. தற்போது பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இது தொடர்பான கடிதங்கள் கிராமப்புற மக்களுக்கு தபால் மூலமாகவே அனுப்பப்படும். மேலும் வேலை வாய்ப்பு நேர்முகத் தேர்வுக்கு தபால் மூலமாகவே கடிதங்கள் அனுப்பப்படும். இந்த தபால்கள் எதுவும் கிடைக்காமல் பள்ளி மாணவ–மாணவிகள் மற்றும் வேலை தேடுவோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.