பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Jun 2018 4:15 AM IST (Updated: 6 Jun 2018 1:58 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திருச்சி மரக்கடை ராமகிருஷ்ணா பாலம் அருகே நேற்று நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருச்சி,

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திருச்சி மரக்கடை ராமகிருஷ்ணா பாலம் அருகே நேற்று நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாவட்ட செயலாளர் லெனின் தலைமை தாங்கினார். இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் ஆர்ப்பாட்டத்தின்போது, ஒரு மோட்டார் சைக்கிளை கீழே சாய்த்து அதன்மேல் பிணத்துக்கு மாலையிடுவது போல் போட்டு ஒப்பாரி வைத்தபடி 3 முறை மோட்டார் சைக்கிளை சுற்றி வந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் பெற கோரி கோஷமிட்டனர். இந்த நூதன ஆர்ப்பாட்டத்தால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story