கிருஷ்ணகிரி அணையில் இருந்து 1,616 கனஅடி தண்ணீர் திறப்பு 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கிருஷ்ணகிரி அணையில் இருந்து 1,616 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. மற்றும் ஓசூர் கெலவரப்பள்ளி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த கெலவரப்பள்ளி அணையின் உச்சபட்ச நீர்மட்டம் 44.28 அடி. நேற்றைய இருப்பு 42.97 அடியாகும். தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பதால் அணைக்கு வரக்கூடிய தண்ணீர் அனைத்தும் அணையின் பாதுகாப்பு கருதி திறந்து விடப்படுகிறது.
அந்த வகையில் நேற்று அணைக்கு வந்த 800 கனஅடி தண்ணீரும் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீருடன் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றுப்படுகை பகுதியில் பெய்த மழையால் கிருஷ்ணகிரி அணைக்கு வரக்கூடிய நீரின் வரத்தும் அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி அணையின் உச்சபட்ச நீர்மட்டம் 42 அடியாகும். நேற்றைய நீர்மட்டம் 36.40 அடி ஆகும். நேற்று வினாடிக்கு 1,150 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையின் முதல் மதகின் ஷட்டர் கடந்த நவம்பர் மாதம் உடைந்தது. இதனால் தற்காலிகமாக ஷட்டர் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதிய ஷட்டர் பொருத்தும் பணி தொடங்க உள்ளதால் அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அந்த வகையில் கிருஷ்ணகிரி அணையில் இருந்து நேற்று வினாடிக்கு 1,616 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் கிருஷ்ணகிரி அணையையொட்டி உள்ள தென்பெண்ணை ஆற்று தரைமட்ட பாலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதையடுத்து பொதுமக்கள் தென்பெண்ணை ஆற்று தரைமட்ட பாலத்தை கடக்க வேண்டாம் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்று கரையோரத்தில் வசிக்க கூடிய மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், கிருஷ்ணகிரி அணையில் உள்ள 8 ஷட்டர்களையும் மாற்றி புதிதாக பொருத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில் முதல் கட்டமாக எதிர்வரும் தென்மேற்கு பருவமழையை கருத்தில் கொண்டு தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஷட்டரை மாற்றி புதிய ஷட்டர் ரூ.3 கோடியில் அமைக்கப்படுகிறது.
இந்த பணிகள் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இதற்கான தளவாட பொருட்கள் திருச்சியில் இருந்து வருகிறது. இதற்காக அணையின் நீர்மட்டத்தை குறைத்து தண்ணீர் அதிகமாக வெளியேற்றப்படுவதாகவும், சுமார் 6 அடி தண்ணீர் வெளியேற்றப்பட்ட பிறகு ஷட்டர் பொருத்தும் பணிகள் தொடங்க உள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story