ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 120 வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன அதிகாரிகள் நடவடிக்கை
அகழியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 120 வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினர்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. தஞ்சை தென்கீழ் அலங்கம் வெள்ளைப்பிள்ளையார் கோவிலில் இருந்து சரபோஜி மார்க்கெட் வரை அகழியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு 120 வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் திருநங்கைகள், கரகாட்ட கலைஞர்கள், இசை கலைஞர்கள் அதிக அளவில் வசித்து வந்தனர்.
அகழியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி அகழியில் வீடுகள் கட்டி வசித்து வருபவர்களுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீசு அனுப்பப்பட்டது. மேலும் ஆட்டோவில் ஒலிபெருக்கி கட்டப்பட்டு வீதி, வீதியாக வந்தும் மாநகராட்சி ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர்.
இந்த பகுதியில் நீண்டநாட்களாக வசித்து வருவதால் மாற்று இடம் ஒதுக்கி தரும்படி பொதுமக்களும், நாட்டுப்புற கலைஞர்களும் கோரிக்கை வைத்தனர். அதன்படி குடும்ப அட்டை, ஆதார் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பிள்ளையார்பட்டியில் உள்ள அரசு குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் வருவதற்கு முன்பாகவே தாங்களாகவே முன் வந்து சிலர், வீடுகளை காலி செய்துவிட்டு அரசு குடியிருப்பில் ஒதுக்கப்பட்ட வீடுகளில் குடியேறிவிட்டனர். ஆனால் பலர், அகழியில் கட்டப்பட்டிருந்த வீடுகளை காலி செய்யாமல் இருந்தனர்.
இந்தநிலையில் வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், தாசில்தார் அருணகிரி, மாநகராட்சி ஆணையர்(பொறுப்பு) காளிமுத்து மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் பொக்லைன் எந்திரத்துடன் தென்கீழ்அலங்கத்திற்கு சென்றனர். பின்னர் அங்கு அகழியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் இடித்து தரைமட்டமாக்கினர்.
இதை பார்த்த பொதுமக்கள் ஒன்றாக கூடி வந்து அதிகாரிகளை சந்தித்து வீடுகளை காலி செய்ய இன்னும் 10 நாட்கள் அவகாசம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஏற்கனவே போதுமான அவகாசம் கொடுத்துவிட்டோம். இதற்கு மேல் அவகாசம் கொடுக்க முடியாது என்று அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதனால் வேறு வழியின்றி அப்பகுதி மக்கள் கண்ணீருடன் தங்களது வீட்டில் இருந்த துணிமணிகள், வீட்டு உபயோக பொருட்களை அள்ளிக் கொண்டு சாலையோரத்தில் வந்து அமர்ந்தனர்.
பின்னர் அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு சென்றனர். குடும்ப அட்டை, ஆதார் அட்டை இருந்தும், வாடகைக்கு குடியிருந்தவர்களில் சிலருக்கு வீடு ஒதுக்கப்படவில்லை. அவர்கள் தான் எங்கே சென்று குடியிருப்பது என்று தெரியாமல் தவித்தனர். ஆக்கிரமிப்பு அகற்றப்படும்போது பிரச்சினைகள் ஏதும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமகாலிங்கம் தலைமையில் 75–க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

Related Tags :
Next Story