கேரளாவுக்கு பாறைகளை கொண்டு செல்ல அனுமதி வழங்கக்கூடாது கலெக்டரிடம் மனு
குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு பாறைகளை கொண்டு செல்ல அனுமதி வழங்கக்கூடாது காங்கிரஸ் கட்சியினர், கலெக்டரிடம் மனு
நாகர்கோவில்,
குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில், நிர்வாகிகள் மகேஷ்லாசர் மற்றும் பலர், குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரேவை சந்தித்து நேற்று ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
குமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் இருந்து பாறைகளை உடைத்து கேரள மாநிலம் விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு கொண்டு செல்ல முயற்சிகள் நடக்கிறது. இதன்மூலம் குமரி மாவட்டத்தில் மலைகளை உடைத்து சுமார் 36 லட்சம் டன் பாறைகளை தேங்காப்பட்டணம் வழியாக கேரளாவிற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர். இது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய, மாநில அரசுகளும், கேரள அரசும் இணைந்து குமரி மாவட்ட மலைவளத்தை அழிப்பதற்கான முயற்சிகளின் ஈடுபடுவதாக தெரிகிறது. இதற்கு குமரி மாவட்ட காங்கிரஸ் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் கண்டனம் தெரிவிக்கிறோம்.
குமரி மாவட்டத்தில் மலைவளம் அழிக்கப்பட்டால், சீதோஷ்ண நிலை மாறும், மழை அளவு குறையும், நீர்வளம் அழிந்துபோகும், விவசாயிகள் பெரிதும் பாதிப்பு அடையும் சூழ்நிலை உருவாகும். எனவே, இந்த திட்டத்துக்கு எவ்வித அனுமதியும் வழங்கக்கூடாது எனக்கேட்டுக்கொள்கிறோம். இந்த திட்டத்தை செயல்படுத்த முயற்சித்தால் குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுமக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story