கச்சநத்தம் 3 பேர் படுகொலை சம்பவத்தில் போலீசாரை முக்கிய குற்றவாளிகளாக சேர்க்க வேண்டும
மானாமதுரை அருகே கச்சநத்தம் கிராமத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் போலீசாரை முக்கிய குற்றவாளிகளாக சேர்க்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.
சிவகங்கை,
மானாமதுரை அருகே கச்சநத்தம் கிராமத்தில் ஆறுமுகம், மருதுபாண்டி, சந்திரசேகர் ஆகிய 3 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். மற்ற 7 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து மீதம் உள்ளவர்களை தேடி வருகின் றனர்.
சம்பவம் நடந்த கச்சநத்தம் கிராமத்திற்கு நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– கச்சநத்தம் கிராமத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை சம்பவமாகும். கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
கடந்த 50 ஆண்டுகளாக இப்பகுதி மக்களை அடிமைகளாக வைத்துள்ளனர். அவர்கள் ஆடு, மாடு வளர்க்கக்கூட அனுமதிக்கவில்லை. அங்கு இருந்த கூட்டுறவு சங்கத்தை கூட மற்ற சமூகத்தினர் பறித்துள்ளனர். தமிழகத்தில் இப்படிப்பட்ட கிராமம் இருந்தது இது ஒன்றுதான்.
இந்த பகுதியில் பலமுறை தாக்குதல் நடத்தப்பட்டு இதில் பாதிக்கப்பட்டவர்கள் இது கு றித்து போலீசில் புகார் செய்தும் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது 3 பேர் கொல்லப்பட்ட பின்னர் தான் 2 போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்களை தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளனர்.
இந்த தண்டனை அவர்களுக்கு போதுமானது இல்லை. இதில் சம்பந்தப்பட்ட கு ற்றவாளிகளுக்கு துணையாக இருந்த அனைத்து போலீசார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். கொலை சம்பவத்தில் போலீசாரை முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கவேண்டும். அப்போது தான் வரும் காலத்தில் இது போன்ற சம்பவங்கள் தமிழக த்தில் நடைபெறாமல் சட்டம்–ஒழுங்கை பாதுகாக்க முடியும்.
தமிழகத்தில் இன்னமும் சாதி ரீதியிலான மோதல்கள் நடப்பது துரதிஷ்டவசமானது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற சட்டம் நிறைவேற்றிய பின்னரும் அவை இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. எனவே இது போன்ற சட்டங்கள் நடைமுறைக்கு வந்தால் தான் சாதி ரீதியிலான மோதல்கள் குறையும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாவட்ட செயலாளர் கந்தசாமி, ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.