கள்ளக்காதலனுக்கு 16 வயது மகளை திருமணம் செய்து வைத்த தாய் துன்புறுத்தி மிரட்டல் விடுத்த 4 பேர் கைது


கள்ளக்காதலனுக்கு 16 வயது மகளை திருமணம் செய்து வைத்த தாய் துன்புறுத்தி மிரட்டல் விடுத்த 4 பேர் கைது
x
தினத்தந்தி 7 Jun 2018 3:45 AM IST (Updated: 7 Jun 2018 12:22 AM IST)
t-max-icont-min-icon

தகாத உறவை தக்க வைப்பதற்காக கள்ளக்காதலனுக்கு 16 வயது மகளை தாய் திருமணம் செய்து வைத்தார். மேலும் சிறுமியை துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வடகடல் கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் பிச்சை. இவரது மகன் ராஜூ (வயது 25). கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த பாண்டியன் மனைவி சத்யா (32). இவர், உறவினர்களுடன் சேர்ந்து தனது 16 வயது மகளை கட்டாயப்படுத்தி கடந்த 2016-ம் ஆண்டு ராஜூவுக்கு திருமணம் செய்து வைத்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்.

இந்நிலையில் மருமகனுக்கும், சத்யாவிற்கும் கள்ள தொடர்பு இருந்து வந்தது. இதனை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமி, ராஜூவை தஞ்சாவூருக்கு அழைத்து சென்று குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில் குழந்தையை பார்த்து கொள்வதற்கு சத்யாவை வரச்சொல்லுமாறு ராஜூ மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுத்துள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ராஜூ, மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டி, அடித்து துன்புறுத்தி வந்ததோடு மட்டுமின்றி, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் மனமுடைந்த அவர் தனது குழந்தையை தூக்கி கொண்டு பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். இதனையடுத்து ராஜூவின் மனைவி தனக்கும், தனது குழந்தைக்கும் பாதுகாப்பு கருதி தன்னை சிறு வயதிலேயே கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதற்கு உடந்தையாக இருந்த தாய் சத்யா, சத்யாவின் தாய் சாந்தி (48), கணவர் ராஜூ, ராஜூவின் தாய் மாரியம்மாள்(45) ஆகியோர் மீது ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி வழக்கு பதிவு செய்து ராஜூ, மாரியம்மாள், சத்யா, சாந்தி ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் கூறியதாவது:-

சிறுமியின் திருமணத்திற்கு முன்பே அவரது தாய் சத்யாவுக்கும், ராஜூவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. மேலும் சத்யா வீட்டில் தனியாக இருக்கும் போது ராஜூவை வரவழைத்து உல்லாசம் அனுபவித்து வந்தார். சத்யாவுடனான பழக்கத்தை பயன்படுத்தி அவரது 16 வயது மகளுடன் ராஜூ பழகியுள்ளார். இதையடுத்து மகளான சிறுமியை சத்யா கட்டாயப் படுத்தி, ராஜூவுடன் உல்லாசமாக இருக்க வைத்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமானார். மகள் கர்ப்பமானது வெளியே தெரிந்தால் அவமானமாகி விடும் என்று எண்ணிய சத்யா, ராஜூவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்.

இதன் மூலம் ராஜூவுடனான தனது கள்ளக்காதலையும் நீட்டித்து கொள்ளலாம் என்று எண்ணினார். இதை யடுத்து ராஜூவுக்கு, மகளை சத்யா திருமணம் செய்து வைத்தார். இதையடுத்து சத்யாவின் மகளும், ராஜூவும் தனியாக குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு ஒருகுழந்தை பிறந்தது. இதனிடையே மகளை ராஜூவுக்கு திருமணம் செய்து வைத்த பிறகும், சத்யா ராஜூவுடான கள்ளக்காதலை கைவிட மனமின்றி மகள் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு சென்று ராஜூவுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜூவும், சத்யாவும் உல்லாசமாக இருப்பதை மகள் நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்தார். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்ற அவர், எப்படியாவது கணவரை, தனது தாயிடம் இருந்து பிரித்து விட வேண்டும் என்று முடிவு செய்து, வடகடலில் உள்ள வீட்டை காலி செய்து விட்டு தஞ்சைக்கு தனது கணவரை அழைத்து சென்று குடும்பம் நடத்தி வந்தார்.

மேலும் அவர், தனது தாயுடனான பழக்கத்தை கைவிடுமாறும், ராஜூவுடன் அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அப்போது ராஜூ, மனைவியிடம், ‘ஏன் இங்கு நீ குழந்தையுடன் கஷ்டப்படுகிறாய் துணையாக உனது தாய் சத்யாவை வேண்டுமென்றால் அழைத்து வா’ என்று கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த ராஜூ, மனைவியை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதையடுத்து தஞ்சையில் இருந்து தனது குழந்தையை தூக்கி கொண்டு அவர் பெற்றோர் வீடான வடகடலுக்கு வந்துவிட்டார். இந்நிலையில் தாய் சத்யா, பாட்டி சாந்தி, கணவர் ராஜூ, மாமியார் மாரியம்மாள் ஆகியோர் துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். 

Next Story