திருச்சி ஜங்ஷன் யார்டு அருகே அடிக்கடி தடம் புரளும் இடத்தில் ரெயில்வே தண்டவாளங்கள் சீரமைப்பு
திருச்சி ஜங்ஷன் யார்டு அருகே அடிக்கடி தடம் புரளும் இடத்தில் ரெயில்வே தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டன.
திருச்சி,
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் அருகே ரெயில் பெட்டிகள் பராமரிக்கும் யார்டு உள்ளது. இந்த யார்டில் இருந்து ரெயில் பெட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்படும். இந்த நிலையில் யார்டில் இருந்து ரெயில் நிலையத்திற்குள் வரக்கூடிய தண்டவாள பாதையும், புதுக்கோட்டை, திண்டுக்கல் மார்க்கத்தில் இருந்து ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்குள் வரக்கூடிய தண்டவாள பாதையும் இணைக்க கூடிய பாயிண்ட் பகுதி யார்டு அருகே உள்ளது. இந்த பாயிண்ட் பகுதியில் சமீபத்தில் காரைக்குடியில் இருந்து பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்த போது தடம் புரண்டது. இதற்கு முன்பு மாற்று ரெயில் என்ஜின்கள் கொண்டு செல்லப்படும் போது தடம் புரண்டுள்ளது. அடிக்கடி அந்த இடத்தில் ரெயில்கள் தடம்புரளும் சம்பவம் நடைபெறுவதால் பாயிண்ட் பகுதியில் தண்டவாளத்தை சீரமைக்க ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதையடுத்து யார்டு அருகே பாயிண்டு மற்றும் அதன் அருகில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரை பழைய தண்டவாளத்தை அகற்றிவிட்டு புதிய தண்டவாளம் அமைக்கப்பட்டன. மேலும் ஜல்லிக்கற்கள் அகற்றப்பட்டு வேறு ஜல்லிக்கற்கள் போடப்பட்டன. இந்த பணியில் ஏராளமான ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும் உயர் அதிகாரிகளும் அந்த இடத்தில் நின்று பணிகளை துரிதப்படுத்தினர். இதேபோல திருச்சி கோட்டத்தில் ரெயில்வே தண்டவாளங்கள் சீரமைப்பு பணி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story