பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருக்கோவில் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருக்கோவில் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குத்தாலம்,
மயிலாடுதுறை அருகே சித்தர்காட்டில் இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு திருக்கோவில் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க பொறுப்பாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராஜகோபால், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோரிக்கைகள்
ஆர்ப்பாட்டத்தின்போது, திருக்கோவில் பணியாளர்களுக்கு பணிக்கொடை சட்டம் 1972-ன் படி பணிக்கொடை வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஓய்வூதியத்தை தகுதி உள்ள அனைவருக்கும் உடனே வழங்க வேண்டும். முதுநிலை திருக்கோவில் பணியாளர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி சம்பளம் நிர்ணயம் மற்றும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். திருக்கோவில்களில் அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்களை நியமனம் செய்வதை அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை இணை ஆணையரிடம் சங்கத்தினர் வழங்கினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் வெங்கடேசன், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story