22 ஆண்டுகளாக போராடி வருகிறார் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உண்மையான நாயகன் வைகோ


22 ஆண்டுகளாக போராடி வருகிறார் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உண்மையான நாயகன் வைகோ
x
தினத்தந்தி 7 Jun 2018 4:45 AM IST (Updated: 7 Jun 2018 1:30 AM IST)
t-max-icont-min-icon

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உண்மையான நாயகன் வைகோ தான் என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில்,

சமீபத்தில் அரசியலில் இருந்து விலகிய நாஞ்சில் சம்பத், அவரின் சொந்த ஊரான குமரி மாவட்டம் மணக்காவிளைக்கு நேற்று வந்தார். தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

கட்சி அரசியலில் இருந்து நான் விலகி விட்டேன். ஆனால் தத்துவ அரசியலில் இருந்து நான் விலக மாட்டேன். அரசியலில் இருந்து விலகிய நான், ம.தி.மு.க.வில் சேரப்போவதாக வரும் தகவல்கள் வெறும் வதந்தி. தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் உண்மையான நாயகன் வைகோ தான். அவர், 22 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி வருகிறார்.

பல்வேறு கோர்ட்டுகளிலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். தற்போதும் அந்த வழக்குகள் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ளது.

வைகோவுக்கு எதிராக நான் ஒருபோதும் பேசியதில்லை. பொதுவாழ்வில் அவரோடு நல்ல நட்பில் தான் உள்ளேன். வைகோவை தவிர, ஸ்டெர்லைட் நாயகன் என எவரும் பெயர் சூட்டிக்கொள்ள முடியாது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. ஆலையை மூடுவதற்கு அரைகுறையான நடவடிக்கையே எடுத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story