நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க.வினர் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம்


நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க.வினர் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Jun 2018 4:00 AM IST (Updated: 7 Jun 2018 1:54 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி புதுவை தெற்கு மாநில தி.மு.க.வினர் சிவா எம்.எல்.ஏ. தலைமையில் கொட்டும் மழையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

புதுச்சேரி,

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த மாணவி பிரதீபா நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார். பிரதீபாவின் உயிரிழப்புக்கு காரணமான நீட் தேர்வை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்யக்கோரி புதுச்சேரி தெற்கு மாநில தி.மு.க. மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுவை அண்ணா சிலை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு புதுவை தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் மாநில துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி, அமுதாகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தைரியநாதன், இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் போது திடீரென மழைப்பெய்யத்தொடங்கியது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பப்பட்டன.

இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி, மாணவர் அணி அமைப்பாளர் மணிமாறன், பொதுக்குழு உறுப்பினர் வேலன், மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் ரெமிஎட்வின், கண்ணன், மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் ஜான்சிராணி, கிளை செயலாளர்கள் விஜயகுமார், தட்சிணாமூர்த்தி, வெங்கட், அகிலன், இளைஞர் அணி தொகுதி அமைப்பாளர் தாமரைக்கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story