18 கிராம மக்கள் கொண்டாடும் பெரிய நோன்பு திருவிழா 16 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது


18 கிராம மக்கள் கொண்டாடும் பெரிய நோன்பு திருவிழா 16 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது
x
தினத்தந்தி 7 Jun 2018 4:00 AM IST (Updated: 7 Jun 2018 2:31 AM IST)
t-max-icont-min-icon

பாப்பாரப்பட்டி அருகே உள்ள பனைகுளத்தில் 18 கிராம மக்கள் சேர்ந்து கொண்டாடும் பெரிய நோன்பு திருவிழா 16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது.

பாப்பாரப்பட்டி,

பாப்பாரப்பட்டி, பனை குளம், அ.பாப்பாரப்பட்டி, வள்ளூர், மாதேஅள்ளி, வேப்பிலைஅள்ளி, சஜ்ஜல அள்ளி, நளப்பநாய்க்கன அள்ளி, கிட்டம்பட்டி, தொட்லாம்பட்டி, வத்திமரத அள்ளி, புதூர் உள்ளிட்ட 18 கிராமங்களுக்கு சொந்தமான கரக செல்லியம்மன், பட்டாளம்மன், திம்மராயசாமி மற்றும் சாக்கப்பன் கோவில் பெரிய நோன்பு திருவிழா 16 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மே 11-ந் தேதி தொடங்கி யது.

அதனைத் தொடர்ந்து பட்டாளம்மன் திருவிழா, கம்பம் நடுதல், கங்கை பூஜை திருவிழா, அக்னி குண்டம், பொன்னேர் திருவிழா, தொடை தோரணம் நடும் திருவிழா உள்ளிட்ட விழாக்கள் தினசரி விமரிசையாக நடைபெற்றது.

மாவிளக்கு ஊர்வலம்

நேற்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய நோன்பை முன்னிட்டு 18 கிராம மக்களும் மாவிளக்கு எடுத்து மேளதாளங்களுடன் அம்மன் கரகம் எடுத்து ஊர்வலமாக தங்கள் ஊர்களிலிருந்து பனைகுளம் வந்தனர். பின்னர் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்தும், திம்மராய சாமியையும் கும்பிட்டனர். விழாவையொட்டி அம் மனுக்கு ஆட்டுக் கிடாவை பலியிட்டு வீடுகளில் கறி விருந்து நடை பெற்றது. இதில் பல்வேறு ஊர்களிலிருந்து வந்த உறவினர் கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு தர்மபுரி, பாலக்கோடு மற்றும் பாப்பாரப்பட்டியில் இருந்து அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழாவில் இன்று (வியாழக்கிழமை) 18 ஊர்களின் சார்பில் தனித்தனியே காளைகள் கொண்டு வரப்பட்டு பனைகுளத்தில் எருதாட்டம் நடைபெறுகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) பூப்பத்திரி நிகழ்ச்சியோடு பெரிய நோன்பு திருவிழா நிறைவடைகிறது. பாப்பாரப்பட்டி சுற்று வட்டாரத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பல ஆயிரம் பேர் இவ்விழாவில் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை 18 ஊர் விழாக் குழுவினர் செய்துள்ளனர். 

Next Story