நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கலெக்டர் ஷில்பா பங்கேற்பு
பாளையங்கோட்டையில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பங்கேற்றார்.
நெல்லை,
இந்திய செஞ்சிலுவை சங்கம் நெல்லை மாவட்ட கிளை சார்பில் பாளையங்கோட்டையில் உள்ள சங்க அலுவலகத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. சங்க தலைவர் டாக்டர் சார்லஸ் பிரேம்குமார் தலைமை தாங்கினார். துணை தலைவர் மரியசூசை, பொருளாளர் டாக்டர் பிரேமசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா, சாரதா குழுமங்களின் தலைவர் சுவாமி பக்தானந்தா மகராஜ், அருட்தந்தை அந்தோணி குரூஸ், எம்.கே.எம்.கபீர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியில் தமிழக ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் அப்துல் ஜப்பார், செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் வெங்கடாசலம், ஜமால் முகமது, சபேசன், ஜெபசிங் செல்வின், நயினா முகமது, சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
* ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்கம் நெல்லை மாநகர் மாவட்டம் சார்பில் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. மாவட்ட தலைவர் உமாபதி சிவன் தலைமை தாங்கினார். சிறுபான்மை பிரிவு அமீர்கான், நெல்லை பாராளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் வி.பி.துரை, குமரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் கிருஷ்ணன் வரவேற்று பேசினார். முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை, நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல்வகாப், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நெல்லை மாவட்ட தலைவர் மீரான் மைதீன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த பெருமாள், சுப.சீதாராமன், அப்துல்காதர், ராஜீவ்காந்தி, அந்தோணி செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்
Related Tags :
Next Story