குறுக்குசால் ஓட்டி குழப்பம் செய்யலாமா?
காவிரி மற்ற நதிகளில் இருந்து வித்தியாசப்பட்டது. தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதையும் எடுத்துக்கொண்டால் வற்றாத ஜீவநதி காவிரி தான்.
காவிரி தமிழகத்தின் வழியே பாய்ந்து சென்றபோதிலும், சோழ மன்னன் கரிகாலன் காலத்தில் தான் டெல்டா மாவட்டங்களுக்கு மதிப்பு வந்தது. இதற்கு காவிரியும், கரிகாலனும் தான் முக்கிய காரணம்.
காவிரி பிரச்சினை என்பது மிக நீண்ட நெடிய வரலாறை கொண்டது. கண்ணம்பாடி கிருஷ்ணராஜசாகர் அணையையும், மேட்டூர் அணையையும் அடிப்படையாக கொண்டு மைசூரு சமஸ்தானத்துக்கும், சென்னை மாகாணத்துக்கும் இந்திய அரசின் மேற்பார்வையில் 50 ஆண்டு கால ஒப்பந்தம் போடப்பட்டது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே காவிரி நீர் பகிரப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த சமயத்தில் டெல்டா மாவட்டங்களில் காவிரி பாசனம் சுமார் 28 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நடைபெற்றது. தமிழகத்துக்கே காவிரி சோறுபோட்டது. அதுவரையில் பிரச்சினை பெரிய அளவில் இல்லை.
ஆனால் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு பிரச்சினை பூதாகரமானது. சாதிப்பிரிவினைகளை களைய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டாலும் கூட, அதன் பிறகு மொழி வெறி அதிகரித்தது. இது காவிரி பிரச்சினையில் பயங்கரமாக எதிரொலித்தது. காவிரி உற்பத்தியாகும் குடகு கர்நாடகத்தின் ஒரு பகுதியானது.
அரசின் தவறான திட்டங்களால் கர்நாடகாவில் ஒவ்வொரு அணையாக கட்டத்தொடங்கினர். தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் போவதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் கர்நாடகம் மேற்கொண்டது. இதனால் தமிழகத்தில் காவிரி பாசன பரப்பளவு குறைய தொடங்கியது. கர்நாடகத்தில் பாசனப் பரப்பு விரி வடைந்தது.
கர்நாடக அரசின் அடாவடித்தனத்தை அடக்க கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் முதல்-அமைச்சராக இருந்த போதெல்லாம் வெவ்வேறு வகையான முயற்சிகளை மேற்கொண்டனர். பேச்சுவார்த்தை நடத்துவது, வழக்கு தொடர்வது என நடவடிக்கை எடுத்தனர். இவர்கள் மூன்று பேரின் முயற்சிகளுமே போற்றத்தக்கதுதான்.
எங்கள் சங்கம் சார்பில் காவிரி விவகாரம் தொடர்பாக 1983-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். அதன் விளைவாக 6 ஆண்டுகளில் காவிரி நடுவர் நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இடைக்கால தீர்ப்பும் நமக்கு சாதகமாகவே கிடைத்தது. பிறகு 1991-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது. ஆனால் கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக வன்முறை வெடித்தது.
காவிரி பிரச்சினை தொடக்கம் முதல் தற்போது வரை தமிழகம் கேட்ட அனைத்து கோரிக்கைகளும் சட்டப்பூர்வமாக கிடைத்து வருகின்றன. இதனால் எரிச்சல் அடையும் கர்நாடகம், அங்குள்ள தமிழர்களை தாக்குவதைத்தான் வாடிக்கையாக கொண்டுள்ளது. அம்மாநிலம் ஆக்கப்பூர்வமாக எதையும் செய்வதில்லை. ஆனால் தமிழக அரசோ ஒவ்வொரு முறையும் சுப்ரீம் கோர்ட்டை நாடி, உரிமைகளை மீட்டெடுத்து வருகிறது.
2007-ல் நடுவர் நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு வந்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதுதான் அதன் சாராம்சம். ஆனால் அந்த உத்தரவு அரசிதழில் வெளியிடப்படவில்லை. உடனே, இதை அரசிதழில் வெளியிட வைக்கவில்லை என்றால், இறுதி தீர்ப்பு நமக்கு சாதகமாக வராது என்று அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் வலியுறுத்தினோம். ஜெயலலிதாவும் நடவடிக்கை மேற்கொண்டார்.
ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கையின் விளைவாகத்தான் தற்போது சுப்ரீம் கோர்ட்டு மூலம் நமக்கு காவிரி மேலாண்மை ஆணையம் கிடைத்திருக்கிறது.
நாம் கேட்டதற்கும் கிடைத்ததற்கும் சிறு வித்தியாசம் உண்டு. காவிரி மேலாண்மை வாரியம் என்பதற்கு பதிலாக காவிரி மேலாண்மை ஆணையம் வந்துள்ளது. அமைப்பின் பெயரில் தான் வித்தியாசம். மற்றபடி அதன் அதிகார பலம் ஒன்றுதான். எனவே இதில் நாம் கவலைப்பட வேண்டியது ஒன்றும் இல்லை. இதுவரை எல்லாம் சிறப்பாக வந்து இருக்கிறது. இனி நாம் ஒற்றுமையாக இருந்து காவிரி தண்ணீரை சரியான அளவு பெற வேண்டும்.
நான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனி சாமியை சந்தித்து நன்றி தெரிவித்ததோடு, சில கோரிக்கைகளையும் முன்வைத்தேன். குறிப்பாக, கர்நாடகாவில் தண்ணீர் எவ்வளவு இருக்கிறது? நமக்கு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் எவ்வளவு தேவை? போதிய மழை கிடைக்குமா? என்பதையெல்லாம் கணக்கு பார்த்து இந்த மாத இறுதியிலோ, ஜூலை மாத தொடக்கத்திலோ காவிரியில் போதிய தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இருக்கிறேன்.
காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து இருப்பது நமக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்பதை அனைவரும் மனதில் நிறுத்த வேண்டும். இதை தாண்டி இனி கர்நாடக அரசிடம் யாரும் பேச்சு வார்த்தைக்கு போகக்கூடாது. இனி இந்த ஆணையம் மூலமாகவே நம் உரிமைகளை பெற வேண்டும். அதை விடுத்து கர்நாடக முதல்- மந்திரியை சந்தித்து பேசுவது கண்டனத்துக்குரியதாகத்தான் அமையும்.
அப்படி கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமியை கமல்ஹாசன் சந்தித்து பேசி இருப்பது, அவரின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது. அங்குள்ள முதல்-மந்திரிக்கு எந்த அதிகாரமும் இல்லை. இதையும் கடந்து அவரிடம் பேச்சுவார்த்தைக்கு சென்று இருப்பது போராடி பெற்ற உரிமைகளை உடைக்கும் முயற்சியோ? என்ற கவலையை தருகிறது.
எனவே, தமிழக அரசியல்வாதிகள் காவிரி விவகாரத்தில் தங்களின் அபிப்பிராயத்தை தனித்தனியாக முன்வைக்காமல், அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து பேச வேண்டும். அனைவரும் கரம்கோர்த்தால்தான் நாம் முழுமையாக வெற்றி பெற முடியும். நீ பெரிய ஆளா? நான் பெரிய ஆளா? என்று மல்லுக்கட்டக்கூடாது. ஒன்றிணைந்து ஆக்கப்பூர்வமான முடிவுகளை எடுக்க வேண்டும். அனைவரும் இணைந்து காவிரியை மீட்போம்.
மன்னார்குடி எஸ்.ரெங்கநாதன், பொதுச்செயலாளர், தமிழ்நாடு காவிரி நீர்பாசன விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு சங்கம்

Related Tags :
Next Story