போலீஸ் பாதுகாப்புடன் 2–வது நாளாக தஞ்சை அகழியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
தஞ்சை அகழியில் போலீஸ் பாதுகாப்புடன் 2–வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
தஞ்சாவூர்,
தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ளது தென்கீழ் அலங்கம். இங்குள்ள அகழியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்புகள் இருந்து வந்தன. இதில் கரகாட்டக்கலைஞர்கள், நையாண்டி மேள கலைஞர்கள், கூலி தொழிலாளர்கள் என 120–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தன.
இந்த அகழியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. மேலும் இங்கு குடியிருந்து வந்தவர்களுக்கு பிள்ளையார்பட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதையடுத்து வீடுகளை பெற்றவர்களில் ஒருசிலர் காலி செய்து அங்கு சென்று குடியேறினர்.
ஆனால் பெரும்பாலானோர் வீடுகளை காலி செய்யவில்லை. இதையடுத்து மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகள் நேற்று முன்தினம் அகற்றப்பட்டன. இந்த பகுதியில் உள்ள 120 வீடுகள் இடித்து தள்ளப்பட்டன. நேற்று 2–வது நாளாகவும் இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நீடித்தது.
பொக்லின் எந்திரம் உதவியுடன் இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. நேற்று முன்தினம் இடிக்கப்படாமல் இருந்த பல வீடுகளின் சுவர்கள் நேற்று இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதையொட்டி அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

Related Tags :
Next Story