மாவட்ட செய்திகள்

ரவுடியை போலீசார் காவலில் எடுத்து விசாரணை + "||" + rowdy Police detained and arrested

ரவுடியை போலீசார் காவலில் எடுத்து விசாரணை

ரவுடியை போலீசார் காவலில் எடுத்து விசாரணை
தொழில் அதிபரை வெட்டிய வழக்கில் ரவுடி யை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் நாகலூத்துமேடு பகுதியை சேர்ந்தவர் சரவணன். பட்டு வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் பிரபல ரவுடியான சின்ன காஞ்சீபுரம் பொய்யாகுளம் பகுதியை சேர்ந்த தியாகராஜன் என்பவர் தனது நண்பர்களை அனுப்பி ரூ.10 லட்சம் கேட்டதாக தெரிகிறது. தொழிலதிபர் சரவணன் பணம் கொடுக்க மறுத்தார். அதனால் அவரை தியாகராஜனின் நண்பர்கள் வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர்.


இது குறித்து பட்டு தொழிலதிபர் சரவணன், சின்ன காஞ்சீபுரம் போலீசில் புகார் செய்தார். இதையொட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபல ரவுடி தியாகராஜனின் நண்பர்கள் 4 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் பிரபல ரவுடி தியாகராஜன் தலைமறைவாக இருந்தார். பின்னர் அவர் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் கோர்ட்டில் சரண் அடைந்தார். அதையொட்டி சின்ன காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டு மூலம் பிரபல ரவுடி தியாகராஜனை ஒரு நாள் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று கூறினார். அதையொட்டி கோர்ட்டு, ரவுடி தியாகராஜனை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது. அதையொட்டி இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு தலைமையில் போலீசார் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரவுடி தியாகராஜனை நேற்று முன்தினம் போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு காலை முதல் இரவு வரை துருவி துருவி விசாரித்தார்.

விசாரணையில், தொழிலதிபரிடம் பணம் கேட்டு நான்தான் என்னுடைய நண்பர்களை அனுப்பி வைத்தேன். பணம் கொடுக்கவில்லை என்றால் கொலை செய்துவிடுவேன் என்று கூறி இருந்தேன். தனக்கு எதிராக காஞ்சீபுரம் கோட்டத்தில் 9 கொலை வழக்குகள், கொலை முயற்சி வழக்குகள், 5 ஆள் கடத்தல் வழக்குகள் உள்ளன. மேலும், விழுப்புரத்தில் நடைபயிற்சி சென்ற ஒரு தி.மு.க. பிரமுகரை கொலை செய்ததாகவும், கும்பகோணத்தில் ஒரு கொலை செய்ததாகவும் ரவுடி தியாகராஜன் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசுவிடம் தெரிவித்தார்.

இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு ரவுடி தியாகராஜனிடம் வாக்குமூலமாக எழுதி வாங்கினார். விசாரணை முடிந்து நேற்று தியாகராஜன் மீண்டும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. புளியந்தோப்பில் ரவுடி கொலை வழக்கில் 6 பேர் கைது
புளியந்தோப்பில் ரவுடி கொலை வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். தங்களை கொலை செய்ய திட்டமிட்டதால் முந்திக்கொண்டு ரவுடியை கொன்றதாக போலீசாரிடம் தெரிவித்து உள்ளனர்.
2. மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம்: ஓட, ஓட விரட்டி ரவுடி படுகொலை - காரில் வந்த கும்பல் வெறிச்செயல்
மதுரையில் ஓட, ஓட விரட்டி ரவுடி ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
3. ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் வழக்கில் பிரபல ரவுடி கூட்டாளியுடன் கைது
ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் வழக்கில் பிரபல ரவுடி கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டார். இருவரும் தப்பி ஓடும்போது தவறி விழுந்ததில் கால் முறிந்தது.
4. தஞ்சையில் வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி கைது
தஞ்சையில் வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடியை போலீசார் கைது செய்தனர். போலீசாரை பார்த்தவுடன் கோவில் சுவரில் ஏறி குதித்ததால் கை எலும்பு முறிந்தது.
5. பட்டுக்கோட்டையில் பயங்கரம்: ஆயுதங்களுடன் ரகளை செய்த ரவுடியை பொதுமக்களே அடித்து கொன்றனர்
பட்டுக்கோட்டையில், பயங்கர ஆயுதங்களுடன் ரகளை செய்த ரவுடியை பொதுமக்களே சேர்ந்து அடித்துக் கொன்றனர். அவருடைய நண்பர் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.