மாவட்ட செய்திகள்

அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடக்கம் + "||" + Audience at the Ariyalur Government Arts College

அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடக்கம்

அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடக்கம்
அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது.
தாமரைக்குளம்,

அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. கல்லூரி முதல்வர் பழனிசாமி கலந்தாய்வை தொடங்கி வைத்தார். இளங்கலை வணிகவியல், ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் 100 மாணவ-மாணவிகள் சேர்த்து கொள்ளப்படு கின்றனர்.


தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) இயற்பியல், வேதியல், கணிதம், கணினி அறி வியல் உள்ளிட்ட பாட பிரிவுகளுக்கும், நாளை (சனிக் கிழமை) தமிழ், வரலாறு, பொருளியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவ- மாணவிகள் காலை 9 மணிக்கு அசல் சான்றிதழ்கள் மற்றும் பெற்றோர் அல்லது பாது காவலருடன் கல்லூரிக்கு வரவேண்டும் என கல்லூரி முதல்வர் தெரிவித்தார். நேற்று நடைபெற்ற கலந்தாய்வில் மாணவ-மாணவிகள் தங் களது பெற்றோருடன் வந்திருந் தனர். மேலும் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது.

கோரிக்கை

அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரே அரசு கலைக்கல்லூரி இது என்பதால் ஏராளமான மாணவ- மாணவிகள் கலந்தாய்வில் கலந்து கொள்ள வருகின்றனர். இதில் பலருக்கு இடம் கிடைக்காததால் ஏமாற்றுத்துடன் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே தமிழக அரசானது ஒவ்வொரு பாட பிரிவிலும் கூடுதல் இடங்கள் ஒதுக்கி ஏழை மாணவ-மாணவிகளுக்கு கல்லூரியில் இடம் கிடைக்க செய்யுமாறு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. தேசிய ஆக்கி போட்டி: வெற்றியுடன் தொடங்கியது தமிழக அணி
தேசிய ஆக்கியின் முதலாவது லீக் ஆட்டத்தை, தமிழக அணி வெற்றியுடன் தொடங்கியது.
2. திருவெறும்பூர் அருகே ஜல்லிக்கட்டுக்கான ஆயத்த பணிகள் தொடக்கம்
திருவெறும்பூர் அருகே சூரியூரில் மாட்டுப்பொங்கல் அன்று நடத்தப்படும் ஜல்லிக்கட்டுக் கான ஆயத்த பணிகள் நேற்று தொடங்கியது.
3. மராட்டிய ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்
மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடங்க உள்ளது.
4. விவசாயிகளின் கடும் எதிர்ப்பை மீறி கரூரில் உயர்மின்கோபுரம் அமைக்கும் பணி தொடக்கம்
விவசாயிகளின் கடும் எதிர்ப்பை மீறி கரூரில் உயர்மின்கோபுரம் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது.
5. ‘டெஸ்ட் தொடரை வெற்றியுடன் தொடங்கி இருப்பது உத்வேகம் அளிக்கும்’ - விராட் கோலி கருத்து
‘ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரை வெற்றியுடன் தொடங்கி இருப்பது உத்வேகம் அளிக்கும்’ என்று இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.