மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் 16 நாட்களுக்கு பிறகு நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர் + "||" + After 16 days in Thoothukudi Fishermen went to sea

தூத்துக்குடியில் 16 நாட்களுக்கு பிறகு நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர்

தூத்துக்குடியில் 16 நாட்களுக்கு பிறகு நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர்
தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நாட்டுப் படகு மீனவர்கள் 16 நாட்களுக்கு பின்னர் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நாட்டுப் படகு மீனவர்கள் 16 நாட்களுக்கு பின்னர் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

துப்பாக்கி சூடு

தூத்துக்குடியில் கடந்த மாதம் 22–ந்தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. அப்போது போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தியதில் 13 பேர் உயிர் இழந்தனர். இதை கண்டித்து அன்று முதல் தூத்துக்குடியில் திரேஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனால் மீன்கள் விலை உயர்த்தி விற்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் உயிர் இழந்த 13 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

கடலுக்கு சென்றனர்

இதை தொடர்ந்து நேற்று போராட்டத்தை கைவிட்டு நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். தூத்துக்குடி திரேஸ்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சுமார் 3 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று காலையில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். வரும் நாட்களில் மாவட்டத்தில் மீன் விலை குறைய வாய்ப்பு உள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. கடலில் அழிந்து வரும் சுறா மீன்களை மீனவர்கள் பாதுகாக்க வேண்டியது அவசியம் தலைமை விஞ்ஞானி மனோஜ்குமார் வேண்டுகோள்
தூத்துக்குடியில் அழிந்து வரும் சுறா மீன்களை மீனவர்கள் பாதுகாக்க வேண்டியது அவசியம் என ஆராய்ச்சி நிலைய தலைமை விஞ்ஞானி மனோஜ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2. குறைந்த அளவு மீன்கள் கிடைத்ததால் பாம்பன் மீனவர்கள் ஏமாற்றம்
பாம்பன் மீனவர்களுக்கு குறைந்த அளவில் மீன்கள் கிடைத்ததால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
3. கடல் முகத்துவாரத்தை தூர்வாரக்கோரி மீனவர்கள் திடீர் சாலை மறியல்
கடல் முகத்துவாரத்தை தூர்வாரக்கோரி புதுச்சேரியில் மீனவர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
4. தஞ்சை மாவட்டத்தில் 13-வது நாளாக விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம் மீன்கள் விலை கடும் உயர்வு
தஞ்சை மாவட்டத்தில் 13-வது நாளாக விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மீன்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
5. மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் கரைக்கு திரும்பிய மீனவர்கள்
கடல் நீரோட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக போதிய மீன்கள் கிடைக்காமல் மீனவர்கள் ஏமாற்றத்துடன் கரைக்கு திரும்பி வருகின்றனர்.