திருச்சியில் ரஜினியின் ‘காலா’ படம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் உற்சாகம்
திருச்சியில் ரஜினியின் ‘காலா’ படம் திரையிடப்பட்ட சினிமா தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் உற்சாகத்துடன் ஆடிப்பாடினர்.
திருச்சி,
திரைப்பட இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் ஏற்கனவே கபாலி படத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். மீண்டும் தனுஷ் தயாரிப்பில் உருவான காலா படத்தையும் ரஞ்சித்தே இயக்கினார். ரஜினிகாந்த், ‘அரசியலுக்கு வருவேன்’ என அறிவித்த பிறகு வெளியாகும் திரைப்படம் என்பதால் மிகவும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி ‘ஸ்டெர்லைட்’ போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்து விட்டனர் என்ற ரஜினிகாந்தின் கருத்துக்கு அரசியல் வாதிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.அத்துடன் காவிரிநதி நீர் பிரச்சினையில் கருத்து சொன்னதற்காக கர்நாடகா மாநிலத்திலும் காலா படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் நேற்று காலா படம் வெளியானது. இதனால், காலா படம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
திருச்சியில் காலா திரைப்படம் நேற்று அதிகாலை 4 மணிக்கே ரசிகர்கள் சிறப்பு காட்சியாக ஒளிபரப்பப்பட்டது. திருச்சியில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படம் வெளியானது. அதிகாலை வேளையிலேயே தியேட்டர்கள் முன்பு ரஜினி ரசிகர்கள் தாரதப்பட்டைகளுடன் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். காலா படத்தில் ரஜினிகாந்த் கருப்பு சட்டை, கருப்பு வேட்டி கட்டியதுபோன்று பெரும்பாலான ரசிகர்கள் கருப்பு சட்டை, பேண்ட் மற்றும் வேட்டியுடன் வந்தனர்.
தியேட்டர்கள் முன்பு வைக்கப்பட்டிருந்த ரஜினிகாந்த் கட்-அவுட்டுகளுக்கு மலர்தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். படம் வெளியான சில தியேட்டர்கள் முன்பு பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். முளைப்பாரி ஊர்வலத்துக்கு முன்பாக கரகாட்டமும் அரங்கேறியது. ரசிகர்கள் முதல் நாளே முதல் காட்சியை பார்க்க ஆர்வப்பட்டதால் டிக்கெட் விலை பலமடங்கு உயர்த்தி விற்பனை செய்யப்பட்டது. ரூ.110 டிக்கெட் ரூ.300 வரை விற்பனை ஆனது.
இது ஒருபுறம் இருக்க, ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் வெளியான நேற்றே பேஸ்புக்கில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. படம் பிரிண்ட் நன்றாக இருந்ததால், பேஸ்புக் நண்பர்கள் பலர் காலா படத்தை ஷேர் செய்தனர். 2 மணி நேரம் 5 நிமிடம் ஓடக்கூடிய அளவில் பேஸ்புக்கில் திரைப்படம் உள்ளது.
பேஸ்புக்கில் இருந்து பலர் காலா படத்தை ‘சேவ்’ செய்தும் பார்த்தனர். பேஸ்புக்கில் காலா திரைப்படம் வெளியானது, ரஜினிகாந்த் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story