3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது


3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது
x
தினத்தந்தி 7 Jun 2018 10:45 PM GMT (Updated: 7 Jun 2018 7:44 PM GMT)

3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில், ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

நாகை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அவுரித்திடலில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் புகழேந்தி தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் சத்தியசீலன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் காந்தி வரவேற்றார். மாநில செயலாளர் சித்ராகாந்தி, மாவட்ட பொருளாளர் ராமசாமி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

தமிழக அரசு ஏழைக்குழந்தைகளின் கல்வி நலன் கருதி பள்ளிகளை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும். தொடக் ககல்வி துறையை ஒழிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். 2017-2018-ம் ஆண்டு ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் ஆகிய 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் நாகை நலத்துறை செயலாளர் பத்மநாபன், சீர்காழி வட்டார செயலாளர் திருமுருகன், நாகை வட்டார செயலாளர் எழிலரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story