மாவட்ட செய்திகள்

ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை + "||" + Auto Driver murder case Life imprisonment for 2 people

ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை
மதுரவாயலில் ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
பூந்தமல்லி,

மதுரவாயல், ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் விஜி என்ற விஜய்(வயது 26). இவர், போரூர் பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். இவருடைய மனைவி மேகலா. இவர்களுக்கு சஞ்சய் என்ற மகன் உள்ளார். அதன்பிறகு மாங்காடு அடுத்த கோவூர் பகுதியில் புதிதாக வீடு கட்டி அங்கு குடியேறி விட்டனர்.


கடந்த 24-3-2014 அன்று மதுரவாயல், ஸ்ரீலட்சுமி நகர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் உறவினர் ஒருவருடன் சென்ற விஜய், அங்கு சாலையின் நடுவே மது அருந்தி கொண்டிருந்த மதுரவாயல் பகுதியை முகமது இம்தாத்உல்லா என்ற முகமது யாசின்(25), அக்கீம்(26) ஆகியோரிடம் தட்டிக்கேட்டார்.

இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் சேர்ந்து கத்தியால் விஜய் மற்றும் அவரது உறவினரை சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த விஜய், அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அக்கீம், முகமது யாசின் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 3-ல் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்து நேற்று இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

அதில் அவர், இந்த கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அக்கீம், முகமது யாசின் ஆகிய 2 பேருக் கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.1,000 அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.