மாவட்ட செய்திகள்

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் 13 பவுன் நகை- பணம் திருட்டு + "||" + Retired government employee home 13 poue jewelry - money theft

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் 13 பவுன் நகை- பணம் திருட்டு

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் 13 பவுன் நகை- பணம் திருட்டு
தஞ்சை அருகே ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் புகுந்து 13 பவுன் நகை- பணத்தை 30 நிமிடத்திற்குள் திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த திருக்கானூர்பட்டி விக்டர் நகரை சேர்ந்தவர் நாகராஜ் (வயது66). இவர் ஓய்வு பெற்ற வேளாண்மைத்துறையில் உதவி அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவருடைய மனைவி விஜயா. சம்பவத்தன்று நாகராஜ் வெளியே சென்று விட்டார்.


இந்த நிலையில் மாலை 5.30 மணி அளவில் விஜயா மாவு அரைப்பதற்காக வீட்டில் இருந்து அருகில் உள்ள மில்லுக்கு சென்றார். அப்போது வீட்டை பூட்டி விட்டு சாவியை கதவின் மேல் பகுதியில் மறைவான இடத்தில் வைத்து விட்டு சென்றார். பின்னர் 6 மணிக்கு வீட்டிற்கு திரும்பினார்.

நகை- பணம் திருட்டு

அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தை கண்டு விஜயா அதிச்சி அடைந்தார். மேலும் வீட்டிற்குள் சென்று பார்த்த போது அங்கு பீரோவில் இருந்த 13 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் விஜயாவை நோட்டமிட்டு, அவர் வீட்டை பூட்டி விட்டு சாவியை வைத்ததை பார்த்து அவர் வெளியே சென்றதும் சாவியை எடுத்து பூட்டை திறந்து கைவரிசை காட்டியது தெரிய வந்தது.

இது குறித்து விஜயா தனது கணவர் நாகராஜூக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் அவர் வல்லம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து கைரேகைகளையும் பதிவு செய்தனர்.

வலைவீச்சு

மேலும் இந்த திருட்டு சம்பவம் குறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்த நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 

தொடர்புடைய செய்திகள்

1. குளச்சல் அருகே ராணுவ வீரர் வீட்டில் நகை– பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
குளச்சல் அருகே ராணுவவீரர் வீட்டில் 2½ பவுன் நகை– பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
2. திருச்சி உறையூரில் 3 வீடுகளில் 18 பவுன் நகைகள்-பணம் திருட்டு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
திருச்சி உறையூரில் 3 வீடுகளில் 18 பவுன் நகைகள், பணத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3. அலுவலக பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம் திருட்டு நாணயங்களையும் மர்ம நபர்கள் அள்ளி சென்றனர்
அறந்தாங்கியில் ஏஜென்சி அலுவலகத்தின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.1½ லட்சத்தையும், மூட்டைகளில் வைத்திருந்த நாணயங்களையும் மர்ம நபர்கள் திருடி சென்று உள்ளனர்.
4. பொள்ளாச்சியில் துணிகரம் வீடு புகுந்து 19 பவுன் நகை திருட்டு - போலீசார் விசாரணை
பொள்ளாச்சியில் வீடு புகுந்து 19 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
5. மதுக்கடை ஷட்டரை உடைத்து ரூ.1¾ லட்சம் மதுபாட்டில்கள் திருட்டு
திருமக்கோட்டை அருகே மதுக்கடை ஷட்டரை உடைத்த மர்ம நபர்கள் கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்தி கடையில் இருந்த ரூ.1¾ லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை திருடி சென்றனர்.