குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை


குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 8 Jun 2018 4:15 AM IST (Updated: 8 Jun 2018 1:37 AM IST)
t-max-icont-min-icon

குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர். மனைவி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்ட கணவர் உடனே தானும் தூக்குப்போட்டு உயிரை மாய்த்த சோக சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது.

சென்னை,

சென்னை மெரினா நேப்பியர் பாலம் அருகே உள்ள அன்னை சத்யாநகரை சேர்ந்தவர் சந்திரன் (வயது 30). இவரது மனைவி சுகன்யா (28). இந்த தம்பதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும், குழந்தை பிறக்கவில்லை.
இதனால் தம்பதியினர் கடும் மன வருத்தத்தில் இருந்தனர். சுகன்யா கடந்த சில நாட்களாக சோகத்தில் இருந்து வந்ததாகவும், அக்கம் பக்கத்தில் இதுகுறித்து தனது சோகத்தை பகிர்ந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று கணவர் சந்திரன் வீட்டில் இல்லாத நேரத்தில், குழந்தை பிறக்காத ஏக்கத்தில் சுகன்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வீடு திரும்பிய சந்திரன் தனது மனைவி வீட்டில் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தார். மனைவியின் பிரிவை தாங்க முடியாத அவர் வீட்டிலேயே தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக்கொண்டார்.

இந்த சம்பவம் அறிந்த அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின்பேரில் தலைமை செயலகம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தம்பதியின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குழந்தை இல்லாத ஏக்கத்தில் தம்பதியினர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியது.

Next Story