மும்பை- நாசிக் நெடுஞ்சாலையில் கார்கள் மோதிய விபத்தில் 2 பெண்கள் பலி 5 பேர் படுகாயம்


மும்பை- நாசிக் நெடுஞ்சாலையில் கார்கள் மோதிய விபத்தில் 2 பெண்கள் பலி 5 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 8 Jun 2018 4:15 AM IST (Updated: 8 Jun 2018 4:12 AM IST)
t-max-icont-min-icon

மும்பை- நாசிக் நெடுஞ்சாலையில் டயர் வெடித்து கட்டுப் பாட்ைட இழந்து ஓடிய கார் மீது இன்னொரு கார் மோதிய விபத்தில் 2 பெண்கள் பலியாகினர். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

அம்பர்நாத், 

மும்பை- நாசிக் நெடுஞ்சாலையில் டயர் வெடித்து கட்டுப் பாட்ைட இழந்து ஓடிய கார் மீது இன்னொரு கார் மோதிய விபத்தில் 2 பெண்கள் பலியாகினர். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

டயர் வெடித்தது

மும்பை ஜோகேஸ்வரியை சேர்ந்த பெண் மீனாட்சி சேடா(வயது54). இவர் கசாராவில் உறவினர் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக நேற்றுமுன்தினம் காரில் சென்று கொண்டிருந்தார். அவருடன் உறவுக்கார பெண் வர்ஷா ஷா(46), தன்சு சேடா, அவரது மனைவி பாவனா ஆகியோர் காரில் இருந்தனர்.

இந்தநிலையில் கசாரா தேவ்லாலி அருகே மும்பை- நாசிக் நெடுஞ்சாலையில் வந்தபோது, திடீரென காரின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் ஒருபக்க தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு மறுபக்க சாலையில் பாய்ந்தது.

அப்போது அந்த வழியாக மும்பை நோக்கி வந்த மற்றொரு கார் அந்த காரின் மீது பயங்கரமாக மோதியது. இதில், மீனாட்சி சேடா வந்த கார் சாலையோரத்தில் உள்ள 20 அடி பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்தது.

2 பெண்கள் பலி

இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த மீனாட்சி சேடா, வர்ஷா ஷா ஆகிய இருவரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தன்சு சேடா, பாவனா மற்றும் அவர்களது கார் மீது மோதிய காரில் இருந்த சித்தார்த் காந்தி, அவரது மனைவி பிரியங்கா, மகள் அகஸ்தியா ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் காயமடைந்த 5 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பலியான இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story