மாவட்ட செய்திகள்

காலா படம் வெளியான தியேட்டர்களில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் + "||" + Gala movie release In theaters Rajini fans celebration

காலா படம் வெளியான தியேட்டர்களில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

காலா படம் வெளியான தியேட்டர்களில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்
காலா படம் வெளியான நிலையில் தியேட்டர்களில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி,

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் செய்ய உள்ள நிலையில் அவர் நடித்த காலா படம் பலத்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியது. இந்த படத்துக்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையிலும் நேற்று திட்டமிட்டபடி வெளியானது.


புதுவையில் உள்ள 13 தியேட்டர்களில் இந்த திரைப்படம் வெளியானது. காலையில் 8 மணிக்கே படங்கள் திரையிடப்பட்டன. படத்தை காண அதிகாலை முதலே தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் குவிந்தனர்.

படம் வெளியான தியேட்டர்கள் முன்பு அவர்கள் பட்டாசு வெடித்தும், ரஜினியை வாழ்த்தி கோஷமிட்டும் மகிழ்ந்தனர். தியேட்டர்களிலும் ரஜினி தோன்றும் காட்சிகளின்போது கைதட்டியும், விசிலடித்தும் மகிழ்ந்தனர்.

பெரும்பாலான தியேட்டர்களில் ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதால் சரியான நேரத்துக்கு ரசிகர்கள் படம் பார்க்க வந்தனர். இதனால் தியேட்டர்கள் முன்பு பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டத்தை காணமுடியவில்லை. மிகக்குறைந்த அளவிலேயே டிக்கெட் கவுண்டர்களில் டிக்கெட்டுகள் வினியோகிக்கப்பட்டதால் அந்த டிக்கெட்டுகளை பெற ரசிகர்கள் முண்டியடித்தனர். பிரச்சினைகள் ஏதும் ஏற்படாத வண்ணம் தியேட்டர்கள் முன்பு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.