மாவட்ட செய்திகள்

ஊதியக்குழு முரண்பாடுகளை களையக் கோரி ஆர்ப்பாட்டம் + "||" + Pay commission Demonstrate the demand for the contradiction

ஊதியக்குழு முரண்பாடுகளை களையக் கோரி ஆர்ப்பாட்டம்

ஊதியக்குழு முரண்பாடுகளை களையக் கோரி ஆர்ப்பாட்டம்
ஊதியக்குழு முரண் பாடுகளை களையக் கோரி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு வருகிற 11-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என அரசு ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவாரூர்,

திருவாரூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு வட்ட தலைவர் சுதாகர் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். சங்கத்தின் மாநில செயலாளர் சவுந்தரராஜன், மாவட்ட தலைவர் பைரவநாதன், மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு.


பங்களிப்பு புதிய ஓய்வூதிய ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதியக்குழு முரண்பாடுகளை களைய வேண்டும். சிறப்பு காலமுறை, தொகுப்பூதியம் பெறும் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். 21 மாத ஊதிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். அரசாணை எண்.56-ஜ ரத்து செய்து தொகுப்பூதியம், மதிப்பு ஊதியம், அவுட்சோர்சிங் முறையில் ஊழியர்களை நியமனம் செய்்வதை கைவிட வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 11-ந் தேதி(திங்கட்கிழமை) மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

கூட்டத்தில் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் சின்னையன், மாவட்ட இணைச்செயலாளர்கள் சண்முகம், பிரகாஷ், மாவட்ட பொருளாளர் மூர்த்தி, வட்ட பொருளாளர் மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட துணைத்தலைவர் ரவிராஜ் நன்றி கூறினார்.