டெல்லி செல்லவும் திட்டம் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஒற்றுமையாக செயல்பட முடிவு எம்.பி.பட்டீலுக்கு 20–க்கும் மேற்பட்டோர் ஆதரவு


டெல்லி செல்லவும் திட்டம் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஒற்றுமையாக செயல்பட முடிவு எம்.பி.பட்டீலுக்கு 20–க்கும் மேற்பட்டோர் ஆதரவு
x
தினத்தந்தி 9 Jun 2018 3:15 AM IST (Updated: 9 Jun 2018 3:01 AM IST)
t-max-icont-min-icon

மந்திரி பதவி கிடைக்காததால் கடும் அதிருப்தி அடைந்துள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஒற்றுமையாக செயல்பட முடிவு செய்துள்ளனர்.

பெங்களூரு,

மந்திரி பதவி கிடைக்காததால் கடும் அதிருப்தி அடைந்துள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஒற்றுமையாக செயல்பட முடிவு செய்துள்ளனர். அவர்கள் டெல்லி செல்லவும் திட்டமிட்டுள்ளனர்.

போர்க்கொடி

கர்நாடகத்தில் காங்கிரஸ்–ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் மந்திரி பதவி கிடைக்காத எம்.பி.பட்டீல், எச்.கே.பட்டீல், எஸ்.ஆர்.பட்டீல், சுதாகர் உள்பட 20–க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

மேலும் மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்துள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஒற்றுமையாக செயல்பட முடிவு செய்துள்ளனர்.

எம்.பி.பட்டீலுக்கு ஆதரவு

குறிப்பாக அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் என்.ஏ.ஹாரீஷ், பி.சி.பட்டீல், துகாராம், சென்னபசப்பா சிவள்ளி, பரமேஸ்வர் நாயக், ரகுமூர்த்தி, ஆனந்த்சிங், நாகேந்திரா, எச்.கே.பட்டீல், சுதாகர், ரோ‌ஷன் பெய்க், சங்கமேஷ்வர், ஈஸ்வர் கன்ட்ரே, சதீஸ் ஜார்கிகோளி, சிவராம் ஹெப்பர் உள்பட 20–க்கும் மேற்பட்டோர் எம்.பி.பட்டீலுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

இந்த கூட்டத்தில் எம்.பி.பட்டீல் தலைமையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவது என்று தீர்மானித்து உள்ளனர். மீண்டும் அடுத்த 2 நாட்களில் பெங்களூருவில் கூடி ஆலோசனை நடத்த எம்.எல்.ஏ.க்கள் முடிவு செய்துள்ளனர். அந்த கூட்டத்திற்கு பின் டெல்லிக்கு சென்று, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை சந்திக்க அவர்கள் திட்ட்மிட்டுள்ளனர். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்த காங்கிரஸ் மேலிடம் என்ன மாதிரியான நடவடிக்கையை எடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Next Story