செம்பூரில் சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து சிறுவன் பலி மாநகராட்சி மீது பெற்றோர் குற்றச்சாட்டு


செம்பூரில் சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து சிறுவன் பலி மாநகராட்சி மீது பெற்றோர் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 9 Jun 2018 4:00 AM IST (Updated: 9 Jun 2018 4:01 AM IST)
t-max-icont-min-icon

செம்பூரில் சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து சிறுவன் பலியானான். இது தொடர்பாக சிறுவனின் பெற்றோர் மாநகராட்சி மீது குற்றம்சாட்டி உள்ளனர்.

மும்பை, 

செம்பூரில் சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து சிறுவன் பலியானான். இது தொடர்பாக சிறுவனின் பெற்றோர் மாநகராட்சி மீது குற்றம்சாட்டி உள்ளனர்.

சாக்கடை கால்வாய்

மும்பை செம்பூர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் பர்வேஸ். இவர் பீட் பகுதியில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் அரியந்த்(வயது2). இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை சிறுவன் அரியந்த் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தான். அப்போது அங்கு சரியாக மூடப்படாத சாக்கடை கால்வாய்க்குள் தவறி விழுந்துவிட்டான்.

இதனை அங்கிருந்தவர்கள் பார்த்து உடனே அலறி அடித்து ஓடிவந்து சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் சிறுவனை மீட்கமுடியவில்லை.

சிறுவன் பலி

இதற்கிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 15 நிமிடம் கழித்து சாக்கடையில் மூழ்கிய சிறுவனை மீட்டு அருகில் உள்ள சதாப்தி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் நடத்திய பரிசோதனையில் சிறுவன் அரியந்த் உயிரிழந்து விட்டது தெரியவந்தது.

இது பற்றி தகவல் அறிந்த டிராம்பே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது மாநகராட்சியின் அலட்சியம் காரணமாக தங்களது மகன் சாக்கடை கால்வாயில் விழுந்து பலியானதாக அவனது பெற்றோர் குற்றம்சாட்டினர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story