மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; மெக்கானிக் பரிதாப சாவு + "||" + Truck collision on motorcycle, Mechanical death toll

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; மெக்கானிக் பரிதாப சாவு

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; மெக்கானிக் பரிதாப சாவு
சூளகிரி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி மெக்கானிக் பரிதாபமாக இறந்தார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.
சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே அஞ்சாலம் கிராமத்தை சேர்ந்தவர் சீனப்பா. இவருடைய மகன் மஞ்சுநாத் (வயது 30). இவர் சூளகிரியில் உள்ள ஒரு தனியார் இரு சக்கர வாகன ஷோரூமில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மாது என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.


இந்த நிலையில், நேற்று மாலை மஞ்சுநாத் தனது நண்பர் ராமுவுடன் மோட்டார் சைக்கிளில் சூளகிரி நோக்கி சென்றார். அலகுபாவி என்ற இடத்தில் சென்றபோது, அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில், மஞ்சுநாத் மற்றும் அவரது நண்பர் ராமு ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

இந்த விபத்தில், மஞ்சுநாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய ராமுவை, அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மஞ்சுநாத்தின் உடலை கைப்பற்றி, ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. வேடசந்தூர் அருகே பழுதாகி நின்ற சரக்கு வேன் மீது லாரி மோதல்; விவசாயி உள்பட 2 பேர் பலி
வேடசந்தூர் அருகே பழுதாகி நின்ற சரக்கு வேன் மீது லாரி மோதியதில் விவசாயி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
2. புதுக்கோட்டை அருகே வேன்-லாரி நேருக்கு நேர் மோதல் அய்யப்ப பக்தர்கள் 9 பேர் பலி கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது பரிதாபம்
புதுக்கோட்டை அருகே வேனும், டிரெய்லர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், அய்யப்ப பக்தர்கள் 9 பேர் உள்பட 10 பேர் பலி ஆனார்கள். அவர்கள் ராமேசுவரம் கோவிலுக்கு சென்று விட்டு ஊர் திரும்பிய போது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
3. சேலம் கொண்டலாம்பட்டியில் லாரி மோதி விபத்து, மோட்டார் சைக்கிளில் ‘லிப்ட்’ கேட்டு வந்த தொழிலாளி பலி
சேலம் கொண்டலாம்பட்டியில் மோட்டார் சைக்கிளில் ‘லிப்ட்’ கேட்டு வந்த தொழிலாளி, பின்னால் வந்த லாரி மோதியதில் பலியானார்.
4. மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்து: மேலும் ஒரு சிறுமி சாவு இழப்பீடு வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலைமறியல்
சுங்குவார்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது மணல் லாரி மோதிய விபத்தில் தந்தை, மகன் பலியானர்கள். மேலும் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த சிறுமியும் உயிரிழந்தாள். இழப்பீடு வழங்க வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
5. மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி வாலிபர் பலி
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி வாலிபர் பலியானார்.