பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்பு: 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது


பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்பு: 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 9 Jun 2018 4:17 AM IST (Updated: 9 Jun 2018 4:17 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

வாலாஜாபாத் 

சுங்குவார்சத்திரத்தை அடுத்த மொளச்சூர் ஓடைத்தெருவை சேர்ந்த வெங்கடேசன் (வயது 29), சென்னை பழஞ்சூர் காமராஜர் தெருவை சேர்ந்த ரூபன்(30) ஆகிய இருவரும் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் சிக்கி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமாணி உத்தரவின்பேரில் சுங்குவார்சத்திரம் போலீசார் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். அதன் அடிப்படையில் அவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பா.பொன்னையா உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் மேலும் ஓராண்டுக்கு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story