பூங்காவில் அறுந்து கிடந்த மின்வயர் சிறுமியின் உயிரை பறித்தது 6 சிறுவர்-சிறுமிகள் காயம்


பூங்காவில் அறுந்து கிடந்த மின்வயர் சிறுமியின் உயிரை பறித்தது 6 சிறுவர்-சிறுமிகள் காயம்
x
தினத்தந்தி 8 Jun 2018 10:47 PM GMT (Updated: 8 Jun 2018 10:47 PM GMT)

பூங்காவில் அறுந்து கிடந்த மின்வயரை மிதித்த 11 வயது சிறுமி மின்சாரம் பாய்ந்து பலியானாள். மேலும் 6 சிறுவர்-சிறுமிகள் காயமடைந்தனர்.

வசாய், 

பூங்காவில் அறுந்து கிடந்த மின்வயரை மிதித்த 11 வயது சிறுமி மின்சாரம் பாய்ந்து பலியானாள். மேலும் 6 சிறுவர்-சிறுமிகள் காயமடைந்தனர்.

பூங்காவில் விளையாடிய...

தானே மாவட்டம் மிராரோடு சண்ட்ஸ்டோன் சொசைட்டியை சேர்ந்தவர் ராம்பரத். இவர் போரிவிலியில் உள்ள தனியார் பயிற்சி வகுப்பு மையத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் ஸ்ருதி (வயது11). இந்தநிலையில் ஸ்ருதி சொசைட்டியில் வசித்து வரும் சிறுவர், சிறுமிகளுடன் அங்குள்ள பூங்காவில் விளை யாடிக்கொண்டிருந் தாள்.

அப்போது தீபாவளிக்கு அலங்காரம் செய்து அகற்றப்படாமல் இருந்த மின் அலங்கார வயர் அறுந்து கீழே விழுந்து கிடந்துள்ளது. இந்த மின்வயரை ஸ்ருதி தெரியாமல் மிதித்து விட்டார். இதில், சுருதி மீது மின்சாரம் பாய்ந்தது.

சிறுமி பலி

இதனால் அவள் அலறித்து டித்தாள். சத்தம்கேட்டு ஓடி வந்த மற்ற சிறுவர், சிறுமிகள் அவளை மீட்க முயன்றனர். இதில், அவர்களையும் மின்சாரம் தாக்கியது. இதில் அவர்களும் அலறித்துடித் தனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே விரைந்து வந்து மின்இணைப்பை துண்டித்தனர். பின்னர் மின்சாரம் பாய்ந்து காயமடைந்த ஸ்ருதி மற்றும் சிறுவர்கள் பிரின்ஸ், ரோகித்குமார், இம்ரான்கான், சிறுமிகள் மகி, சாரதா, பாரதி ஆகிய 7 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுமி ஸ்ருதி பரிதாபமாக உயிரிழந்தாள். மற்ற சிறுவர், சிறுமிகள் 6 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே ஸ்ருதியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் மிரா ரோடு போலீசார் கவனக்குறைவாக செயல்பட்டதாக சொசைட்டி செயலாளர், சேர்மன், பொருளாளர் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story