நாசரேத்தில் பரிதாபம் திருமணமான ஒரு மாதத்தில் புது மாப்பிள்ளை தற்கொலை


நாசரேத்தில் பரிதாபம் திருமணமான ஒரு மாதத்தில் புது மாப்பிள்ளை தற்கொலை
x
தினத்தந்தி 10 Jun 2018 2:00 AM IST (Updated: 10 Jun 2018 12:50 AM IST)
t-max-icont-min-icon

நாசரேத்தில் திருமணமான ஒரு மாதத்தில் புது மாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாசரேத், 

நாசரேத்தில் திருமணமான ஒரு மாதத்தில் புது மாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–

மெடிக்கல் கடை ஊழியர்

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் கொர்னேலியுஸ் தெருவைச் சேர்ந்தவர் அய்யாகுட்டி. கூலி தொழிலாளி. இவருடைய மனைவி தமிழரசி. இவர்களுடைய மகன் முத்துகுமார் (வயது 30). இவர் நாசரேத்தில் உள்ள மெடிக்கல் கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

முத்துகுமாருக்கும், திருச்செந்தூர் தோப்பூரைச் சேர்ந்த அனுசியாவுக்கும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின்னர் முத்துகுமார் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அனுசியா தன்னுடைய பெற்றோரின் வீட்டுக்கு சென்றார்.

தற்கொலை

இந்த நிலையில் நேற்று காலையில் அய்யாகுட்டி வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். தமிழரசி, அப்பகுதியில் உள்ள தன்னுடைய உறவினரின் வீட்டுக்கு சென்றார். மதியம் முத்துகுமார் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்த தமிழரசி தன்னுடைய மகன் தூக்கில் பிணமாக தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜசுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தற்கொலை செய்த முத்துகுமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஒரு மாதத்தில் புது மாப்பிள்ளை தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story