மாவட்ட செய்திகள்

காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரிப்பு: காற்றாலையின் மின் உற்பத்தி 35 ஆயிரம் யூனிட்டாக உயர்வு + "||" + With the increase in wind speed in Theni district, the power generation of a single air has risen to 35 thousand units.

காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரிப்பு: காற்றாலையின் மின் உற்பத்தி 35 ஆயிரம் யூனிட்டாக உயர்வு

காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரிப்பு: காற்றாலையின் மின் உற்பத்தி 35 ஆயிரம் யூனிட்டாக உயர்வு
தேனி மாவட்டத்தில் வீசும் காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஒரு காற்றாலையின் மின்சார உற்பத்தி 35 ஆயிரம் யூனிட்டாக உயர்ந்துள்ளது.
ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி, ஜி.உசிலம்பட்டி, கண்டமனூர், ஆத்தங்கரைப்பட்டி, கோவிந்தநகரம், சீப்பாலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட காற்றாலைகள் உள்ளன. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தேனி மாவட்டத்தில் தென்மேற்கு திசையில் இருந்து காற்று வீசத்தொடங்கியது. இதனையடுத்து காற்றாலைகளில் மின் உற்பத்தி தொடங்கியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு காற்றாலையின் ஒருநாள் மின் உற்பத்தி 20 ஆயிரம் யூனிட் என்ற அளவில் இருந்தது.

இந்நிலையில் காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்த நிலையில் காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரித்தது. கடந்த 2 நாட்களாக ஒரு காற்றாலையின் ஒருநாள் மின் உற்பத்தி 35 ஆயிரம் யூனிட்டாக அதிகரித்தது. இனிவரும் நாட்களில் தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் அதிகரிக்கும் என்பதால் காற்றாலைகளின் மின் உற்பத்தி உச்சக்கட்டத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரையில் தேனி மாவட்டத்தில் உள்ள காற்றாலைகளில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுமையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இனி வரும் நாட்களில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிக்கும் என்பதால் தேனிமாவட்டத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மின்சாரத்தை பகிர்ந்தளிக்கும் வகையில் கூடுதல் மின்வழிப்பாதை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.