தீக்குளித்து பெண் தற்கொலை கணவன் கைது


தீக்குளித்து பெண் தற்கொலை கணவன் கைது
x
தினத்தந்தி 10 Jun 2018 3:45 AM IST (Updated: 10 Jun 2018 1:21 AM IST)
t-max-icont-min-icon

முத்துப்பேட்டை அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது கணவனை போலீசார் கைது செய்து உள்ளனர்.

முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள கீழவாடியக்காடு கிராமத்தை சேர்ந்தவர் உத்திராபதி (வயது39). விவசாயி. இவருடைய மனைவி கலைராணி (39). சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த கலைராணி மண்எண்ணெய்யை எடுத்து தனது உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கலைராணி உயிரிழந்தார்.

கைது

இதுகுறித்து கலைராணியின் உறவினர் அண்ணாதுரை முத்துப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோர் சந்தேகத்தின் பேரில் உத்திராபதியிடம் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து கலைராணியை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உத்திராபதியை கைது செய்தனர். பின்னர் அவரை திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Next Story