மாவட்ட செய்திகள்

எட்டயபுரம் அருகே ஓடும் பஸ்சில் பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை + "||" + Running bus The woman succumbs to suicide by drinking poison

எட்டயபுரம் அருகே ஓடும் பஸ்சில் பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை

எட்டயபுரம் அருகே ஓடும் பஸ்சில் பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை
எட்டயபுரம் அருகே ஓடும் பஸ்சில் பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
எட்டயபுரம், 

எட்டயபுரம் அருகே ஓடும் பஸ்சில் பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கட்டிட தொழிலாளி 

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா வேப்பங்குளத்தைச் சேர்ந்தவர் விஜய். இவர் திருப்பூரில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி முத்துமாரி (35). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

முத்துமாரி கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். நேற்று முன்தினம் முத்துமாரி திருச்செந்தூர் கோவிலுக்கு தனியாக புறப்பட்டு சென்றார். பின்னர் அவர் இரவில் திருச்செந்தூரில் இருந்து மதுரை செல்லும் அரசு பஸ்சில் புறப்பட்டார். அப்போது முத்துமாரி ஓடும் பஸ்சில் வி‌ஷம் குடித்தார்.

போலீசார் விசாரணை 

இரவு 10 மணியளவில் எட்டயபுரம் அருகே கீழ ஈரால் பகுதியில் பஸ் வந்தபோது, முத்துமாரி வாயில் நுரை தள்ளிய நிலையில் பஸ்சில் மயங்கி கிடந்தார். உடனே அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே முத்துமாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில், எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.