சங்ககிரி தாலுகாவில் ஜமாபந்தி
சங்ககிரி தாலுகாவில் ஜமாபந்தி நடைபெற்றது.
சங்ககிரி,
சங்ககிரி தாலுகாவில் நடந்த ஜமாபந்தியில் சேலம் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜய்பாபு கலந்துகொண்டு கோனேரிபட்டி அக்ரஹாரம், காவேரிபட்டி, தேவூர், காவேரிபட்டி அக்ரஹாரம், கோனேரிபட்டி, புள்ளாகவுண்டம்பட்டி, புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம் ஆகிய கிராமங்களின் கிராம கணக்குகளை தணிக்கை செய்தார். மேலும் பட்டா மாறுதல், வாரிசு சான்று, உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 139 மனுக்கள் பெறப்பட்டன. இதில், சங்ககிரி தாசில்தார் அருள்குமார், துணை தாசில்தார்கள் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story