ஆத்தூர் அருகே விபத்தில் காயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை அளிக்க அமைச்சர் உத்தரவு
விபத்தில் காயம் அடைந்த தொழிலாளிக்கு சிகிச்சை அளிக்க அமைச்சர் உத்தரவிட்டார்.
ஆத்தூர்,
ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் திட்டா நகர் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 60), தொழிலாளி. இவர் நேற்று இரவு 9.30 மணி அளவில் சைக்கிளில் ஆத்தூர் வந்து விட்டு வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். விநாயகபுரம் என்ற இடத்தில் சென்ற போது எதிரே மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபர் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டார். இதில் வரதராஜனுக்கு கையில் எலும்பு முறிவு மற்றும் தலையில் காயம் ஏற்பட்டது. அங்கு வந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். அப்போது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விநாயகபுரம் வழியாக காரில் வந்த அமைச்சர் சரோஜா காரை நிறுத்தி காயம் அடைந்தவருக்கு உடனடியாக முதலுதவி மற்றும் தீவிர சிகிச்சை வழங்க உத்தரவிட்டார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
Related Tags :
Next Story