மாவட்ட செய்திகள்

சாலை விரிவாக்க பணி எதிரொலி: கோவில் அருகே இருந்த 2 கடைகள் இடித்து அகற்றம் + "||" + Road expansion work echo: 2 shops near the temple were demolished

சாலை விரிவாக்க பணி எதிரொலி: கோவில் அருகே இருந்த 2 கடைகள் இடித்து அகற்றம்

சாலை விரிவாக்க பணி எதிரொலி: கோவில் அருகே இருந்த 2 கடைகள் இடித்து அகற்றம்
எலச்சிப்பாளையத்தில் சாலை விரிவாக்க பணி நடைபெறுகிறது. இதையொட்டி கோவில் இடத்தில் இருந்த 2 கடைகள் இடித்து அகற்றப்பட்டன.
எலச்சிப்பாளையம்,

திருச்செங்கோடு தாலுகா எலச்சிப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.13 சென்ட் நிலம் உள்ளது. இதில் 1986-ம் ஆண்டு 6 கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டது. சாலை விரிவாக்க பணியையொட்டி 4 கடைகள் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இடிக்கப்பட்டது. அதன்பிறகு 2 கடைகள் மட்டுமே இடிக்கப்படாமல் செயல்பட்டு வந்தது. அதில் டீக்கடையும், சலூன் கடையும் அடங்கும்.


இந்த நிலையில் 2 கடைகளின் அருகே சிலர் மதுபாட்டில்களை திருட்டுத்தனமாக கொண்டு வந்து விற்பனை செய்து வந்தனர். இதனால் அந்த பகுதியில் பஸ்சுக்காக காத்திருக்கும் பள்ளி, கல்லூரி மாணவிகளும், பெண்களும் மதுபிரியர்களால் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இதன் காரணமாக இந்த 2 கடைகளையும் அகற்ற கோரி அப்பகுதி மக்கள் அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தனர்.

பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள 2 கடைகளை அகற்றி விட்டு நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பல்வேறு போராட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சாலை விரிவாகத்துக்கு இடையூறாக இருந்த 2 கடைகளை நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கடைகள் அகற்றப்பட்ட இடத்தில் புதிதாக நிழற்குடை அமைக்க வேண்டும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 


தொடர்புடைய செய்திகள்

1. குடியிருப்பு பகுதிகளுக்கு நடுவே செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு; பொதுமக்கள் சாலை மறியல்
ஜெயங்கொண்டம் அருகே குடியிருப்பு பகுதிகளுக்கு நடுவே செல்போன் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
2. மயக்க மருந்து கொடுப்பது மட்டுமல்லாமல் ஆபத்தான நிலையில் இருப்பவர்களை காப்பாற்றுவதும் மயக்க டாக்டர்களின் பணி
மயக்க மருந்து கொடுப்பது மட்டுமல்லாமல் ஆபத்தான நிலையில் இருப்பவர்களை காப்பாற்றுவதும் மயக்க டாக்டர்களின் பணி என்று மருத்துவக்கல்லூரி முதல்வர் குமுதாலிங்கராஜ் கூறினார்.
3. காரை அரசு மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்பட கோரி பொதுமக்கள் சாலை மறியல்
காரை அரசு மருத்துவமனை பகல், இரவு என முன்பு செயல்பட்டது போல் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும் என வலியுறுத்தி ஆலத்தூர் கேட் அரியலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
4. நீக்கம் செய்யப்பட்ட மாணவரை மீண்டும் சேர்க்க வலியுறுத்தி அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் சாலை மறியல்
திருவாரூர் திரு.வி.க. அரசு கல்லூரியில் இருந்து நீக்கப்பட்ட மாணவர் மாரிமுத்துவை மீண்டும் சேர்க்க வலியுறுத்தி மாணவ-மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
5. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நூதன முறையில் சாலை மறியல்; 5 பேர் கைது
கீழப்பழுவூர் மானா மதுரை தேசிய நெடுஞ்சாலையில் லாரியை, இருசக்கர வாகனத்தின் மூலம் கயிறு கட்டி இழுத்து நூதன முறையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.