மாவட்ட செய்திகள்

மணல் கடத்தல்; 6 பேர் கைது + "||" + Sand smuggling 6 people arrested

மணல் கடத்தல்; 6 பேர் கைது

மணல் கடத்தல்; 6 பேர் கைது
திருவள்ளூரை அடுத்த மப்பேடு போலீசார் நேற்று முன்தினம் பேரம்பாக்கம் அருகே உள்ள வெள்ளக்கால்வாய் பகுதி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
திருவள்ளூர்,

அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த 2 லாரிகளை பறிமுதல் செய்து அதை ஓட்டி வந்த டிரைவர்களான அஷாகர் (வயது 40), திருவேற்காடு கஸ்தூரிபாய் அவென்யூவை சேர்ந்த முருகன் (32) ஆகியோரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய ஒருவரை மப்பேடு போலீசார் தேடி வருகின்றனர்.


காஞ்சீபுரத்தை அடுத்த விலாம்பூர் பகுதியில் டிராக்டரில் மணல் கடத்தப்படுவதாக சூணாம்பேடு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமிக்கு தகவல் கிடைத்தது. அதையொட்டி அவர் போலீசாருடன் அங்கு விரைந்து சென்றார். அப்போது டிராக்டரில் மணல் கடத்தியது தெரிந்தது. இதையொட்டி விலாம்பூர் பகுதியை சேர்ந்த முருகன் (45) என்பவரை போலீசார் கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா ஆர்.கே. பேட்டை ஒன்றியத்தில் மணல் கடத்துவதாக ஆர்.கே.ே- பட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி உத்தரவின் பேரில் ஆர்.கே. பேட்டை போலீசார் சில பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது வங்கனூர் மலை பகுதி ஓடைகளில் சிலர் மணல் அள்ளி கொண்டு இருந்தனர்.

போலீசாரை பார்த்ததும் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். அங்கு இருந்த வங்கனூரை சேர்ந்த ஆறுமுகம் (40) என்பவரை போலீசார் கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர். விசாரணையில் தப்பி ஓடியவர் டிராக்டர் உரிமையாளரான கிருஷ்ணா குப்பம் கிராமத்தை சேர்ந்த சிதம்பரம் (50) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

அதே போல் பாலாபுரம் மலை பகுதி ஓடைகளில் டிராக்டரில் மணல் கடத்திய பாலாபுரம் கிராமத்தை சேர்ந்த மணிமாறன் (30), அவரது உதவியாளரான நரசம்பேட்டையை சேர்ந்த மகேந்திரா (26) ஆகியோரை போலீசார் கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய டிராக்டர் உரிமையாளரான திம்மராஜபுரம் கிராமத்தை சேர்ந்த சுரேந்தர் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. பண்ருட்டி அருகே, மணல் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
பண்ருட்டி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. இது பற்றிய விவரம் வருமாறு:-
2. நாகை அருகே: மணல் கடத்திய லாரி, டிராக்டர் பறிமுதல்- டிரைவர்கள் 2 பேர் கைது
நாகை அருகே மணல் கடத்திய லாரி, டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர்கள் 2 பேரை செய்தனர்.
3. பாபநாசம் வனப்பகுதியில் தேக்கு மரங்கள் கடத்தல்: வனத்துறை ஊழியர் உள்பட 6 பேர் மீண்டும் கைது
பாபநாசம் வனப்பகுதியில் தேக்கு மரங்கள் வெட்டி கடத்தியதாக வனத்துறை ஊழியர் உள்பட 6 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டனர்.
4. மணல் கடத்தல்: தடுக்கச்சென்ற சப்-இன்ஸ்பெக்டரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி
மணல் கடத்தலை தடுக்கச்சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை லாரி ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. கொள்ளிடம் ஆற்றில் இருந்து படகுகளில் மணல் கடத்தல்
சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் இருந்து படகுகளில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய இருவரை வலைவீசி தேடிவருகின்றனர்.