மாவட்ட செய்திகள்

ஆசாரிபள்ளத்தில் நள்ளிரவில் ஆட்டோவுக்கு தீ வைப்பு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு + "||" + Police helicopter for the victims of the fire at midnight in Ariespally

ஆசாரிபள்ளத்தில் நள்ளிரவில் ஆட்டோவுக்கு தீ வைப்பு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

ஆசாரிபள்ளத்தில் நள்ளிரவில் ஆட்டோவுக்கு தீ வைப்பு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
ஆசாரிபள்ளத்தில் நள்ளிரவில் ஆட்டோவுக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
நாகர்கோவில்,

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அனந்தன்நகரை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 34), ஆட்டோ டிரைவர். சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவர், தனது ஆட்டோவை இரவில் வீட்டுக்கு அருகே நிறுத்தி வைப்பது வழக்கம். அதுபோல் நேற்று முன்தினமும், இரவில் ஆட்டோவை வீட்டின் அருகே நிறுத்தி விட்டு தூங்க சென்றார்.


இந்த நிலையில் நள்ளிரவில், ஆட்டோவுக்கு யாரோ மர்ம நபர்கள் தீ வைத்ததாக தெரிகிறது. இந்த தீ மள, மளவென எரிய ஆரம்பித்தது. ஆட்டோ தீப்பிடித்து எரிவதை பார்த்த அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து ஆனந்தகுமாரிடம் தெரிவித்தனர்.

உடனே அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஆட்டோவில் எரிந்த தீயை  அணைக்க முயற்சி செய்தார். இருப்பினும், தீயில் ஆட்டோ முழுவதும் எரிந்து நாசமானது.

இந்த சம்பவம் குறித்து ஆனந்தகுமார் ஆசாரிபள்ளம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோவுக்கு தீவைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. நாகையில், கணினி மையத்தில் திடீர் தீ விபத்து ரூ.7¼ லட்சம், கம்ப்யூட்டர்கள் எரிந்து நாசம்
நாகை கணினி மையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ரூ.7¼ லட்சம் மற்றும் 4 கம்ப்யூட்டர்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2. பட்டாசு கடை-குடோனில் தீ விபத்து ரூ.2 லட்சம் பொருட்கள் நாசம்
திருச்சியில் பட்டாசு கடை மற்றும் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 லட்சம் பொருட்கள் நாசமடைந்தன.
3. மண்மேட்டு புற்று மாரியம்மன் கோவிலில் தீ விபத்து ரூ.1½ லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
குளித்தலை அருகே உள்ள மண்மேட்டு புற்று மாரியம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1½ லட்சம் பொருட்கள் எரிந்து நாசமாயின.
4. பெற்றோர் கடைவீதிக்கு சென்று இருந்த நிலையில் பூட்டிய வீட்டுக்குள் குழந்தைகள் பட்டாசுகளை வெடித்ததால் தீ விபத்து
பெற்றோர் கடைவீதிக்கு சென்று இருந்த நிலையில் பூட்டிய வீட்டுக்குள் குழந்தைகள் பட்டாசுகளை வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது.
5. ஒரத்தநாட்டில் ஓட்டலில் தீ விபத்து; ரூ.10 லட்சம் பொருட்கள் சேதம் கியாஸ் சிலிண்டர்கள் வெடித்ததால் பரபரப்பு
ஒரத்தநாட்டில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்த தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. தீ விபத்தின்போது கியாஸ் சிலிண்டர்கள் சில வெடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.