டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு புதிதாக வங்கி கடன் வழங்க வேண்டும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்


டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு புதிதாக வங்கி கடன் வழங்க வேண்டும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 10 Jun 2018 10:45 PM GMT (Updated: 10 Jun 2018 6:50 PM GMT)

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு புதிதாக வங்கி கடன் வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் கூறினார்.

குடவாசல்,

காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்த பிறகு குறுவை சாகுபடி நடை பெறும் என நம்பியிருந்த காவிரி டெல்டா விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது காவிரி டெல்டாவில் தண்ணீர் இல்லாததால் 5 முதல் 7 லட்சம் ஏக்கர் நிலங்கள் சாகுபடி செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆதலால் தமிழக அரசு, டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதிக்கப்பட்ட தாக அறிவித்து வங்கி கடனை ரத்து செய்ய வேண்டும். மேலும் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு புதிதாக வங்கி கடன் வழங்க வேண்டும்.

அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் கோடை சாகுபடி செய்யும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளதால் மோடிக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ஆனால் மக்கள் யாருக்கு அங்கீகாரம் கொடுக்கிறார்கள் என்பது தான் முக்கியம். சட்டசபை தேர்தலில் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. 200 இடங்களிலும் வெற்றி பெறுவோம் என கூறியுள்ளார். அவரின் நம்பிக்கைக்கு வாழ்த்துக்கள்.

தமிழகத்தில் கொள்ளை சம்பவம் அதிகரித்துள்ளது. வட மாநில கொள்ளையர்களின் அட்டகாசத்தினால் பெண்கள் வெளியில் நடமாட அச்சப்படுகின்றனர். இதுகுறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடுவது குறித்து தமிழகத்திலுள்ள பெரிய கட்சிகள் இதுவரை வாய் திறக்கவில்லை. த.மா.கா.வின் நிலைபாடு மக்கள் விருப்பம் போன்று தேர்தல் நேரத்தில் தெரிவிக்கும். த.மா.கா.வினர் மக்களை சந்தித்து வருகிறோம். இதனால் படிப்படியாக கட்சி வளர்ச்சி அடைந்து வருகிறது. வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் த.மா.கா. வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story