விழுப்புரம் மாவட்டத்தை டி.டி.வி தினகரனின் கோட்டையாக மாற்றி காட்டுவோம் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில அமைப்பு செயலாளர் எஸ்.சிவராஜ் பேச்சு


விழுப்புரம் மாவட்டத்தை டி.டி.வி தினகரனின் கோட்டையாக மாற்றி காட்டுவோம் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில அமைப்பு செயலாளர் எஸ்.சிவராஜ் பேச்சு
x
தினத்தந்தி 11 Jun 2018 3:45 AM IST (Updated: 11 Jun 2018 12:31 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தை டி.டி.வி. தினகரனின் கோட்டையாக மாற்றி காட்டுவோம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில அமைப்பு செயலாளர் எஸ்.சிவராஜ் பேசினார்.

திருக்கோவிலூர்,

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில அமைப்பு செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.சிவராஜை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா ஒப்புதலோடு, மாநில துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நியமனம் செய்துள்ளார். இதையடுத்து அவர் விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் கே.ஜி.பி.ஞானமூர்த்தி, தெற்கு மாவட்ட செயலாளர் பிரபு எம்.எல்.ஏ. மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் திருக்கோவிலூர் ஏரிக்கரை மூலையில் இருந்து திறந்த வேனில் ஊர்வலமாக புறப்பட்டு பள்ளிவாசல் தெரு, கடைவீதி வழியாக பஸ் நிலையம் வந்து, அங்குள்ள அண்ணா, எம்.ஜி.ஆர். சிலை மற்றும் ஜெயலலிதா உருவ படத்துக்கும், ஐந்துமுனை சந்திப்பில் உள்ள காந்தி சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதைத்தொடர்ந்து திருக்கோவிலூர் சுப்பிரமணிய திருமண மண்டபத்தில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர்கள் கே.ஜி.பி.ஞானமூர்த்தி, பிரபு எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினார்கள். ஒன்றிய செயலாளர்கள் கோதண்டராமன், வினாயகமூர்த்தி, செந்தில்குமரன், குமார், துரை, மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் மணலூர்பேட்டை சங்கர், நகர செயலாளர்கள் இளவரசன், ராஜ், அன்புமுருகன், சோலையப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. கோமுகி மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழில் அதிபர் எஸ்.கார்த்திகேயன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநில அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.சிவராஜ் பேசுகையில், தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் தீவிர விசுவாசிகள் அனைவரும் சசிகலா, டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் தான் உள்ளனர். அதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் உண்மை விசுவாசிகள் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றி மாவட்டத்தின் அனைத்து தொகுதியையும் கைப்பற்றி விழுப்புரம் மாவட்டத்தை டி.டி.வி.தினகரனின் எம்.எல்.ஏ.வின் கோட்டையாக மாற்றிக்காட்டுவோம் என்றார்.


Next Story