மாவட்ட செய்திகள்

மக்களுக்கு பயன்படாத அ.தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் - முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா பேச்சு + "||" + The AIADMK regime that is not useful to the people should end

மக்களுக்கு பயன்படாத அ.தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் - முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா பேச்சு

மக்களுக்கு பயன்படாத அ.தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் - முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா பேச்சு
மக்களுக்கு பயன்படாத அ.தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று பெண்ணாடத்தில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா பேசினார்.
பெண்ணாடம்,

பெண்ணாடத்தில் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவையொட்டி தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஆ.ராசா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

திராவிட கட்சி தான் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தபட்டவர்களை முன்னுக்கு கொண்டு வந்தது. தமிழகத்தில் முதல்-அமைச்சராக ஆட்சி செய்தவர்கள் தங்களுக்கு என்று ஒரு அடையாளம் வைத்திருந்தார்கள்.


தமிழ் மொழியை செம்மொழியாக அறிவித்தது தி.மு.க. தான். பெண்களுக்கு சுய உதவி குழு அமைத்து அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு வழிகாட்டியது தி.மு.க. இப்படி நம் கட்சியின் சாதனைகளை சொல்லிக்கொண்டே போகலாம், ஆனால் இப்போது இருக்கும் ஆட்சியால் மக்கள் சிரமமடைந்து வருகின்றனர். எனவே மக்களுக்கு பயன்படாத அ.தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.