சத்துணவு முட்டைகளை வெளிசந்தையில் விற்று முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்


சத்துணவு முட்டைகளை வெளிசந்தையில் விற்று முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 11 Jun 2018 4:15 AM IST (Updated: 11 Jun 2018 12:49 AM IST)
t-max-icont-min-icon

சத்துணவு முட்டைகளை வெளிசந்தையில் விற்பனை செய்து முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

திருப்பனந்தாள்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சோழபுரத்தில் நடைபெற்ற கட்சி பிரமுகர்கள் இல்ல விழாவிற்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு சத்துணவில் வழங்கப்படும் முட்டைகள் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் மணல் கடத்தல் அதிகளவில் நடைபெறுகிறது. இதில் அமைச்சர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுகிறது. இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநாடு

திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார். இவ்வாறு அவர் கூறினார். 

Next Story