மாவட்ட செய்திகள்

அனுமதியின்றிமணல் அள்ளிவந்த டிரைவர்கள் கைது 2 லாரிகள் பறிமுதல் + "||" + Drivers arrested for sand theft without permission

அனுமதியின்றிமணல் அள்ளிவந்த டிரைவர்கள் கைது 2 லாரிகள் பறிமுதல்

அனுமதியின்றிமணல் அள்ளிவந்த டிரைவர்கள் கைது 2 லாரிகள் பறிமுதல்
அனுமதியின்றி மணல் அள்ளிவந்த டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர். 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருப்புவனம்,

திருப்புவனம் யூனியனைச் சேர்ந்த பொட்டப்பாளையம் ஊராட்சிக்குட்பட்டது டி.கரிசல்குளம் கிராமம். இந்த கிராமத்தில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேது தலைமையிலான போலீசார் அங்கு சென்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த 2லாரிகளை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த லாரிகளை ஓட்டி வந்த டிரைவர்கள் மதுரை மாவட்டம் கல்லம்பள் கிராமத்தைச் சேர்ந்த சந்தானம்(வயது41), எஸ்.புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல்(39) ஆகிய 2பேர் மீது வழக்குப்பதிந்து போலீசார் கைது செய்தனர். 2 லாரிகள் பறிமுதல் செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.